இலங்கை விமானத்தில் திடீர் புகை : அவசர தரை இறக்கம் - விமான நிலையத்தில் பதற்றம்

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானத்தில் திடீரென புகை கிளம்பியதை அடுத்து பாங்கொக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இலங்கையின் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸுக்கு சொந்தமான UL 891 ரக விமானம் பாங்கொக்கில் இருந்து கொழும்பை நோக்கி இன்று புறப்பட்டது. இந்நிலையில் விமானத்தின் உள்ளே திடீரென புகை கிளம்பியதால் பயணிகள் திகிலடைந்தனர்.

இதையடுத்து விமானம் உடனடியாக சொர்ணபூமி விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து உனடியாக வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் பாதுகாப்பு மற்றும் மீட்புப்படையினர் விமானத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர் நிலைமை சரியானதும் பயணிகளை விமானத்தில் ஏறும்படி விமானத்தின் கப்டன் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த விமானத்தில் இலங்கைக்கு செல்ல பயணிகள் மறுப்பு தெரிவித்தனர்.

பாதுகாப்பு குறைபாடு நிறைந்த அந்த விமானத்தில் வருவதற்கு தாங்கள் தயாரில்லை என்று தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு, முன்னர் தான் பாதுகாப்பு தொடர்பாக குறைபாடுகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று சர்வதேச விமான அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -