அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாணசபையின் விசேட கூட்டம் எதிர்வரும் 4ஆம் திகதி புதன் கிழமை இடம் பெறும். அன்றைய தினம் ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ விசேட உரையாற்றவுள்ளார்.
இலங்கை அரசியலமைப்பின் பிரிவு 154டீ உப பிரிவு 8 மற்றும் 10 ஆகியவற்றுக்கு அமைவாக ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கு அமைய இந்த உரை இடம்பெறவுள்ளது.
இதன்பொருட்டு மே மாதம் 4 ஆம் திகதி சபையைக் கூட்டுமாறும், தவிசாளரின் சம்மதத்தோடு சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்குமாறும் ஆளுநரின் செயலாளரினால் கிழக்கு மாகாணப் பேரவைச் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தவிசாளர் சந்திரதாச கலப்பதியின் சம்மதத்தோடு சகல உறுப்பினர்களுக்கும் கூட்டத்துக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் எம்.சீ.எம்.செரீப் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநராக ஒஸ்ரின் பெர்ணாண்டோ கடமையேற்ற பின் மாகாண சபையில் உரையாற்றவுள்ளமை இதுவே முதற்தடைவ என்பது குறிப்பிடத்தக்கது.