வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வசதி..!

வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற இலங்கையர்களுக்கு, இலங்கையில் நடைப்பெறும் தேர்தலில் வாக்களிக்க வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை நாடாளுமன்ற செயற்குழு ஒன்று மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான பிரேரணை ஒன்று 23 நாடாளுமன்ற உறுப்பினர்களால் கைச்சாத்திடப்பட்டு கடந்த மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த பிரேரணை இந்த வாரம் நாடாளுமன்றத்தினால் அங்கிகரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன் கீழ் வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற 1.5 மில்லியன் இலங்கையர்கள் வாக்களிக்கும் வாய்ப்பை பெறுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -