கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(01) வெள்ளிக்கிழமை ஏறாவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு ஏறாவூரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆடைத்தொழிற்சாலை மற்றும் கைத்தறி உற்பத்தி தொழிற்சாலை ஆகியவற்றை திறந்து வைக்கவுள்ளார் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
இன்று பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏனைய அதிதிகளாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண ஆளுனர், பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, இன்று ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வு எமது www.importmirror.com இணையத்தளத்தில் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்படும்