மதத்­துக்கு எதி­ராக பேஸ்புக்கில் கருத்து வெளியிட்ட மாணவன் நஸ்­முதீன் வெட்டிக்கொலை..!

ங்காளதேசத்தில் பேஸ்புக் இணை­யத்­தளப் பக்­கத்தில் மதத்­துக்கு எதி­ரான தனது கண்­ணோட்­டத்தை வெளிப்­ப­டுத்­திய சட்ட மாணவர் ஒருவர் வெட்டுக் கத்­தியால் வெட்டி புதன்­கி­ழமை பின்­னி­ரவு படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

நஸ்­முதீன் சமாத் (26 வயது) என்ற மேற்­படி சட்ட மாணவர் மதத் தலை­வர்­க­ளுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் சம்­பவ தினம் டாக்கா பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு அரு­கி­லுள்ள சந்­தியில் சென்று கொண்­டி­ருந்த அவரை மோட்டார் சைக்­கிளில் வந்த 3 ஆயு­த­தா­ரிகள் நெருங்கி அவ­ரது தலையை கத்­தியால் வெட்­டிய பின் அவர் மீது துப்­பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்­றுள்­ளனர்.

இதன்­போது நஸ்­முதீன் சமாத் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்ளார்.

ஜகன்னாத் பல்­க­லைக்­க­ழ­கத்தில் சட்­டத் ­து­றையில் பட்ட கற்­கை­நெ­றியை கற்று வந்த அவர் தனது பேஸ்புக் இணை­யத்­தளப் பக்­கத்தில் 'எனக்கு மதம் கிடை­யாது' என்ற தலைப்பின் கீழ் மத தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ரான கருத்­து­களை எழு­து­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்­துள்ளார்.

இந்தத் தாக்­கு­த­லுக்கு இது­வரை எந்­த வொரு குழுவும் உரி­மை­கோ­ர­வில்லை. கடந்த வருடம் அந்­நாட்டில் மதச் சார்பற்ற 4 இணையத்தள எழுத்தாளர்கள் மத கடும் போக்காளர்களால் வெட்டிக் கொல்லப்பட் டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -