புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமையை செயற்படுத்த பாராளுமன்ற தெரிவுக்குழு

எம்.வை.அமீர்-

புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமையை செயற்படுத்த பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்க பாராளமன்றம் அனுமதியளித்துள்ளதாக இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டணியின் ஏற்பாட்டாளர் றக்கீப் ஜௌபர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள செய்திக்குறிப்பொன்றில் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், காலம் கனியும் புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமை..புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமையை செயற்படுத்த பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்க இலங்கை பாராளுமன்றம் அனுமதி அளித்திருக்கிறது எமக்கு ஒரு விசேட செய்தியாகும். அதேசமயம் எதிர்வரும் ஓகஸ்டில் நடைபெற இருக்கும் ஐ.நா சபையில் புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமையை நடைமுறை படுத்த இலங்கை மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கம் கேள்விக்குள்ளாக்கப்படும்நிலையும் உருவாகி இருக்கின்றது. 

இதற்கு மேலாக புதிய அரிசியல் சாசனத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமை உள்வாங்கப்படலாம் என்ற நம்பிக்கையும் அதிரகரித்திருக்கின்றது. 

எமது அரசின் மீதான பல பக்க அழுத்தம், வாக்குரிமையை அமுல்படுத்த சாதகமான களத்தை அமைக்கப் பெற்றிருப்பதை எண்ணி மன மகிழ்ச்சி அடைகிறோம். இதை பேசுபொருளாக்கி எம்மோடு தோளோடு தோள் நின்று உழைத்த அனைத்து உறுப்பினர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். ஒரு விடயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறோம் . எங்களுடைய எந்த செயற்பாடும் எந்தவொரு அதிகாரமும் இல்லாமலேயே முன்னெடுக்கப் பட்டது. 

உண்மையுள்ள சமூக போராட்டத்திற்கு அதிகாரம் அவசிமில்லை துய சிந்தனையுடன் செயற்பட்டாலே போதும். என்றும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டணியின் ஏற்பாட்டாளர் றக்கீப் ஜௌபர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -