எம்.ஐ.சம்சுதீன்,எம்.எம்.ஜபீர், ஹாசிப் யாஸீன்-
விஞ்ஞான, தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் 'கிராமத்திற்கு தொழிநுட்பம்' எனும் தொனிப்பொருளின் கீழ் சாய்ந்தமருது வெலிபோரியன் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட விதாதா வள நிலைய கட்டிட திறப்பு விழா விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பின் பேரில் விஞ்ஞான, தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிரதம அதிதியாக கலந்துகொண்டு கட்டித்தை இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆராம்ப கைத்தொழில் அமைச்சர் தயகம, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுத்தீன், கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீட், அமைச்சின் செயலாளர், உதவி செயலாளர், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், விதாதா வள நிலைய உத்தியோகத்தாகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது விதாதா வள நிலையத்தில் கனினி பயிற்ச்சியை நிறைவு செய்யத மாணவர்களுக்கும், பிரதேசத்தில் தொழிநுட்பங்களை கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மற்றும் சாய்தமருதில் கண்டுபிடிக்கப்பட்ட தொழிநுட்பம் மற்றும் உற்பத்திகளும் காண்காட்சிக்கு வைக்கப்பட்டதை கலந்து கொண்ட அமைச்சர்கள் உள்ளிட்ட அதிதிகள் பார்வையிட்டனர்.