எஸ்.அஷ்ரப்கான்-
மிக நீண்ட காலத் தேவையாக இருந்த கல்முனை பிரதேச விளையாட்டுக்கழகங்கள் அனைத்தையும் ஒன்றிணைந்து “கல்முனை விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனம்” என்ற அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் செயலாளர் எஸ்.ஏ.எம். பஸ்வாக் தெரிவித்தார்.
கல்முனை அல்- பஹ்றியா மகா வித்தியாலயத்தில் இக்கூட்டம் கடந்த (04) திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதேசத்தின் சுமார் 19 விளையாட்டுக்கழகங்கள் கலந்து கொண்டன.
இச்சம்மேளனத்தின் தலைவராக, விக்டோரியஸ் விளையாட்டுக்கத்தின் எம்.எம். றியாத் அவர்களும், செயலாளராக, பிர்லியன்ட் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.எம். பஸ்வாக், பொருளாளராக, றினோன் விளையாட்டுக்கழகத்தின் எஸ்.எச்.எம். அஸ்மி, தவிசாளராக, சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் எம்.ஐ.ம். மனாப், உப தலைவர்களாக, அஸ்-ஸம்ஸ் விளையாட்டுக்கழகத்தின் எல்.எம். சர்ஜூன், டொப் றேங்
விளையாட்டுக்கழகத்தின் ஏ.சி.எஸ். றஹ்மான்,
சன்டர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் எம்.ஐ.எம். முஸ்தாக்,
இமாம் விளையாட்டுக்கழகத்தின் எம்.எச்.எம். றினோஸ்,
லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் மௌலவி என்.எம். ஜெலில் ஆகியோரும்,
உப செயலாளராக, லெஜென்ட்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏ.சி.எம். அஸீம், உப பொருளாளராக, யங் பேட்ஸ் விளையாட்டுக்கழகத்தின் எம்.வை.பாயிஸ், இணைப்பாளராக ஜிம்கானா விளையாட்டுக்கழகத்தின் எஸ்.எல்.எம். ஜாபீர், கணக்கு பரிசோதகராக டொப் றேங் விளையாட்டுக்கழகத்தின் எம்.எஸ். ஜாபீர் காதர் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.