சீனித்தம்பி யோகேஸ்வரன் கைது செய்யப்பட வேண்டும் - ஜனாதிபதி,பிரதமர்,புலனாய்வு துறைக்கு கடிதம்

நாச்சியாதீவு பர்வீன்-
ல வருட யுத்தத்திற்கு பின்னர் எல்லா இன மக்களும், ஒற்றுமையுடனும் விட்டுக்கொடுப்புடனும் செயற்படும் போது இந்த சமாதன சூழலை குழப்பும் வகையில் தமிழ் இளைஞர்களை மீண்டும் ஒரு யுத்தத்திற்கு தூண்டுகிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்.

கெளரவ பாராளமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன். கலந்து கொள்கின்ற மேடைகளில் எல்லாம் விடுதலைப்புலிகளின் போராடிய தனி ஈழத்தை நாம் அடைந்தே தீருவோம் என சவால் விட்டுவருகின்றார். ஆக இன்னொரு யுத்தத்திற்கான முஸ்தீபை அவர் கமுக்கமாக ஆரம்பித்துள்ளார் என்பது இதன் போது புலனாகின்றது.

சீனித்தம்பி யோகேஸ்வரன் போன்ற சமாதானத்தை குழப்ப முனையும் பேர்வழிகள் ஒன்றை உணரவேண்டும். முஸ்லிம்களாகிய நாங்கள் எல்லா சமூகத்தினருடனும் ஒற்றுமையுடனும், விட்டுக்கொடுப்புடனும் வாழ்வே விரும்புகிறோம். அழகான இந்த சின்ன நாட்டை துண்டாடி அதற்குள் இரண்டு, மூன்று ஆட்சிகள் என்பது வெறும் கற்பனை வாதமே தவிர தற்காலத்தில் அது நடைமுறை சாத்தியமற்றது. 

இந்த யதார்த்தத்தை உணராத யோகேஸ்வரன் இப்போது நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி, ஏழை தமிழ் இளைய சமூகத்தை உசுப்பேத்தி மீண்டும் அவர்களை ஆயுதமேந்தச் செய்கின்ற சதிமுயற்சியில் ஈடுபட்டுவருவது புலனாகின்றது. இவரின் இந்த ஈழத்தை பெற்றுக்கொடுக்க எடுக்கின்ற முயற்சியானது மீண்டும் ஒரு யுத்த சூழலுக்குள் நமது இலங்கைத்திருநாட்டை தள்ளிவிடும் அபாயம் இருக்கிறது.

தமிழர்களும்-முஸ்லிம்களும் பிட்டும் தேங்காய்பூவும் போல வாழ்ந்த ஒரு காலம் இருந்தது, கடந்த கால யுத்தம் ஏற்படுத்திய கோரமான வடுக்களும், காயங்களும் மெல்ல மெல்ல ஆறிவருகின்ற இந்த நிலையில் மீண்டும் ஒரு யுத்தத்தினால் நாம் பாதிக்கப்பட்டுவிடுவோமா என்ற அச்சம் இப்போது முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மண்ணில் பிறந்த அனைத்து பிரஜைகளுக்கும் இந்த மண் உரித்துடையது. நாம் இலங்கையர்கள் என்ற உச்சகட்ட நம்பிக்கையுடன் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள சகோதரர்களின் நிம்மதியான வாழ்க்கையில் மண்ணை அள்ளிப்போட நினைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனை நாட்டின் சமதாதனத்தையும்,இறைமையையும் கருத்தில் கொண்டு கைது செய்யவேண்டும்.

ஒரு ஜனநாயக நாட்டின் மனிதவுரிமைகள் மீறல் சட்டத்தின் கீழ்

(1) அரசுக்கெதிரான சதித்திட்டம் தீட்டியமை.
(2) இனங்களுக்கிடையில் இனவாத்த்தைத்தூண்டி குழப்பம் உண்டு பண்ண முயற்சிக்கின்மை.
(3) மக்களின் சகஜ வாழ்வில் குழப்புகின்றமை.
(4) நாட்டின் இறைமைக்கும்,பாதுகாப்புக்கும் சவாலான நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.

இந்த நான்கு விடயங்களை கருத்திற்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனை கைது செய்து போராடிப்பெற்ற சமாதானத்தை காப்பாற்றுங்கள்.

பிரதிகள் :-

(1) அதிமேதகு ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன.
(2) கெளரவ பிரதம மந்திரி ரனில் விக்ரம சிங்க.
(3) கெளரவ சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ.
(4) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்.
(5) கெளரவ எதிர்கட்சி தலைவர் திரு சம்பந்தன் ஐயா.
(6) பொலிஸ் மா அதிபர் கெளரவ பூஜித்த ஜயசுந்தர.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -