அக்கரப்பத்தனையில் மினி சூறாவளி - வீடுகள் சேதம்

க.கிஷாந்தன்-
க்கரப்பத்தனை சென் ஜோர்ஜ் தோட்டத்தில் 02.04.2016 அன்று மாலை 3 மணி முதல் 6 மணி வரை ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய அடைமழையினால் வீடுகள் சிலவற்றின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டுச் சென்றுள்ளன.

அக்கரப்பத்தனை சென் ஜோர்ஜ் தோட்டத்திலுள்ள இரண்டு வீடுகளின் கூரைகள் முழுமையாக காற்றினால் அள்ளுண்டு சென்றதால் இரண்டு குடும்பங்களைச்சேர்ந்த ஆறு பேர் பாதிப்படைந்துள்ளனர்.

அத்தோடு மரங்களும் முறிந்து விழுந்துள்ளது. மேற்படி கூரைகள் காற்றினால் அள்ளுண்டு அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் சிக்கியதால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் உறவினர்களின் வீட்டில் தற்காலிக தங்கவைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தோட்ட நிர்வாகமும், நுவரெலியா பிரதேச செயலகத்தின் மூலமும் உதவிகளை வழங்குவதற்கு தோட்ட உதவி அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -