நிஸ்மி-
கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் அம்பாரை மாவட்ட அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கான இணைப்பாளராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த தொழில் அதிபர் முஹம்மட் இப்றாஹிம் நிர்பான் அவர்கள் 01.03.2016 முதல் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இவருக்கான நியமனக் கடிதத்தை பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி கிழக்கு சமூக அபிவிருத்தி அமைப்பின் (எஸ்டோ) அமைப்பில் நடைபெற்ற வைபவமொன்றின்போது வழங்கி வைத்தார்.
இதன்போது; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வர்த்தக, வாணிபத்துறை அமைச்சருமான றிஸாட் பதியுதீன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.மஹ்றூப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான எம்.ஏ.அப்துல் மஜீட் ஆகியோர்களும் சமூகமளித்திருந்தனர்.