கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்ட முன்வரைபை ஜனாதிபதியிடம் கையளித்த முதலமைச்சர்..!

கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்ட முன்வரைபு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சென்ற வெள்ளிக்கிழமை (01) கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரி கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டால் குறித்த திட்ட முன்வரைபு கையளிக்கப்பட்டது.

எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் கல்வி, சுகாதாரம், மக்களின் வாழ்க்கைத் தரம், வருமானம், ஆகியவற்றில் அபிவிருத்தி அடைந்து பொருளாதாரத்திலும் உணவு உற்பத்தியிலும் தன்னிறைவுள்ள ஒரு மாகாணமாக கிழக்கை மாற்றுவதற்கான தூரநோக்குள்ள வரைவுத் திட்டமாக, இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயத்த ஆடைத் தொழிற்சாலையை திறந்துவைப்பதற்காக, ஜனாதிபதியின் இந்த விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -