தேசிய காங்கிரஸின் தேசிய மாநாட்டில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுத்தீன்நிறுத்தப்படுவாரா...?

Q
சஜீத்-

நாளை (23) நடைபெறவிருக்கின்ற தேசிய காங்கிரஸின் 12 வது பேராளர் மாநாட்டில் கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு தேசிய காங்கிரஸின் ஆதரவினையும், வாக்குகளையும் பெற்று கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பிற்பாடு பதவிகளுக்காகவும், வாகனங்களுக்காகவும், பணங்களுக்காகவும் சோரம் போய் முஸ்லிம் காங்கிரஸில் ஒட்டி இருக்கம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுத்தினை நாளை நடைபெறும் பேராளர் மாநாட்டில் தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னால் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா கி.மா. சபை உறுப்பினர் ஆரிப் சம்சுத்தினை இடை நிறுத்தி அவருடைய அரசியல் அதாவது கிழக்க மாகாண சபையின் அரசியல் இருப்பு உரிமையை விட்டு இடை நிறுத்துவாரா.....????? என தேசிய காங்கிரஸின் ஆரம்ப கட்ட போராளிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

மேலும் தேசிய காங்கிரஸின் போராளிகள் அவரை வெற்றி பெற செய்வதற்காக பல தியாகங்களை மேற்கொண்டுள்ளனர். 

ஆனால் அவர் தனது சுயநலத்துக்காக கட்சி மாறி இருப்பது வேதனையாக இருக்கின்றது என போராளிகள் மிகவும் வேதனையாக அவர்களது கருத்துகளை தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -