நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவின் தற்போதைய ஊடக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ரொஹான் வெலிவிட்ட மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.
கடந்த 27ஆம் திகதி இரவு குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இருவரும் ஜனாதிபதியை சந்தித்து CSN தொலைக்காட்சியில் இடம்பெற்ற பண தூய்மையாக்கல் குற்றச்சாட்டு தொடர்பில் தான் கைது செய்யப்படவுள்ளதாகவும், குறித்த கைதினை தடுக்குமாறும் ரொஹான் வெலிவிட்ட கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது தான் எந்தவொரு நடவடிக்கையினையும் மேற்கொள்வதற்கு ஆயத்தமாக இருப்பதாக ரொஹான் வெலிவிட்ட ஜனாதிபதிக்கு வாக்குறுதியளித்துள்ளார்.
அந்த தொலைக்காட்சியை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பணம் தூய்மையாக்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு நிதி குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு யோஷித ராஜபக்ச, ரொஹான் வெலிவிட்ட உட்பட குழுவனருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த விசாரணைகளை தொடர்வதற்காக ரொஹான் வெலிவிட்ட கைது செய்யப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.