அவுஸ்திரேலியாவில் இருந்து சுமார் 1350 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வனுவாட்டு தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது.
வடக்கு அவுஸ்திரேலியாவில் இருந்து சுமார் 1350 கிலோ மீட்டர் தூரத்தில் தீவுக்கூட்டங்களை கொண்ட வனுவாட்டு என்ற நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள சாண்ட்டொ தீவில் இருந்து சுமார் 151 கி.மீ. தூரத்தில் பூமியின் அடியில் சுமார் 35 கி.மீ ஆழத்தில் உருவான நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
வனுவாட்டு தீவில் சுமார் 3 லட்சம் மக்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.