எம்.எம்.ஜபீர்-
நாவிதன்வெளி பிரதேச செயலக மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் ஒரு வருடகால டிப்ளோமா தையல் பயிற்சியை நிறைவு செய்த யுவதிகளின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தும் பிரதேச உற்பத்திக் கண்காட்சி நாவிதன்வெளி கலாச்சார மத்திய நிலையத்தில் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் கே.அருந்தேவராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு காட்சி கூடத்தினை இன்று (7) திறந்து வைத்தார்.
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு அதிதிகளாக அம்பாரை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.கலீலூர்ரஹுமான், நாவிதன்வெளி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் டி.கமலநாதன், நாவிதன்வெளி பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் வீ.சிறிநாதன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகள், யுவதிகள், போதனாசிரியைகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது 2015ஆம் ஆண்டு ஒரு வருடகால டிப்ளோமா தையல் பயிற்சியை நிறைவு செய்த யுவதிகளுக்கு சான்றிதழும் கலந்துகொண்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டடதுடன் நாவிதன்வெளி பிரதேச செயலக மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் சிரேஷ்ட தையல் போதனாசிரியாக கடமையாற்றிவரும் திருமதி றசீனா கே.ரகுமான் ஆற்றிய சேவையை பாராட்டி நாவிதன்வெளி பிரதேச செயலகம் மற்றும் தையல் பயிற்சியை கற்ற யுவதிகளாளும் நினைவுச் சின்னம், அன்பளிப்புகளும் மற்றும் பொன்ணாடை போர்திக் கௌரவிக்கப்பட்டார்.