இவ் முக்கியத்துவம் வாய்ந்த சீன விஜயத்தில் பிரதமருடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் நீர்வழங்கள் அமைச்சருமான கௌரவ ரவுப் ஹகீமும் இணைந்து கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது சீன ஜனாதிபதி ஜின்பிங் , பிரதமர் லீ கசியான் , சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியற் குழு தலைவர் ஜங் டெஜியங் மற்றும் தனியார் துறை பிரதநிதிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதுடன் இரு நாடுகளுக்கிடையில் பல்வேறு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடபடவுள்ளது ,
எதிர்வரும் 09 ம் திகதி வரை சீனாவில் தங்கி இருக்கும் பிரதமர் தலைமையலான இக் குழுவில் தலைவர் ரவுப் ஹகீம் , வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம ,நிமல் ஸ்ரீபால டிசில்வா , சரத் அமுனுகம , சஜித் பிரமேதாச மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ,பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுத ஹெட்டி ஆகியோரும் செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.