விளையாட்டின் ஊடாக போதைவஸ்துப் பாவனையற்ற மாணவர் சமூகத்தை உருவாக்கும் செயற்திட்டம்..!

பி.எம்.எம்.ஏ.காதர்-
ன்றைய இளைஞர்கள் மத்தியில் போதைவஸ்த்து பாவனை அதிகரித்துள்ளது. இதனைக்கட்டுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் விளையாட்டின் ஊடாக போதைவஸ்துப் பாவனையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கும் செயற் திட்டம் முன்னெடுக்கபபடுகின்றது என கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபள்யு.ஏ.ஹப்பார் தெரிவித்தார்.

மருதமுனை பறகத் டெக்ஸ் நிறுவனத்தின் அணுசரணையுடன் கல்முனை பொலிஸ் நிலையம் நடாத்தவுள்ள 'விளையாட்டின் ஊடாக போதைவஸ்துப் பாவனையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கும் செயற் திட்டம்' என்ற தொனிப் பொருளில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி-2016 தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கும், பாடசாலைகளின் விளையாட்டு ஆசிரியர்களுக்கும் விளக்கமளிக்கும் சந்திப்பு (27-04-2016) அன்று மருதமுனை பறகத்டெக்ஸ் நிறுவனத்தின் மண்டபத்தில் நடைபெற்றது. 

இங்கு உரையாற்றிய போதே கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபள்யு.ஏ.ஹப்பார் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் உரையாற்றுகையில்:- 

கல்வி கற்க வேண்டிய இளைஞர் சமூகம் இன்று போதைவஸ்த்துப் பாவனைக்கு அடிமையாகி சமூகச் சீரகேட்டுக்குள் சிக்கி பல்வேறு இன்னல்களுக்குள்ளாகி கஷ்டப்படுகின்றனர். இவ்வாரான இளைஞர் சமூகத்திற்கு மறுவாழ்வளிக்கவே விளையாட்டின் ஊடாக போதைவஸ்துப் பாவனையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் எதிர்வரும் மே மாதம் 12ஆம், 13ஆம் திகதிகளில் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் மற்றும் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை மைதானம் ஆகியவற்றில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. இச்சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பன்னிரெண்டு முன்னணிப்பாடசாலைகளைச் சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட மாணவர் அணிகள் பங்குபற்றவுள்ளன.

இச்சுற்றுப் போட்டியில் 1ஆம், 2ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு பறக்கத் நிறுவனத்தின் அனுசரணையில் பொலிஸ் வெற்றிக்கிண்ணமும், சான்றிதளும், விளையாட்டுச் சீருடைகளும் வழங்கப்படவுள்ளது மேலும் இப்போட்டியில் பங்குபற்றும் அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதுடன் சிறந்த ஆட்டக்காரர்களுக்கான கிண்ணங்களும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு பறக்கத் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.பரீட் கிண்ணங்களை கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபள்யு.ஏ.ஹப்பாரிடம் வழங்கினார்; 

இந்த நிகழ்வில் அனுசரனையாளரான பறக்கத் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.பரீட், கல்முனை கல்விவலயத்தின் விளையாட்டுக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.அப்துல் சத்தார், இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட மத்திய குழுவின் தவிசாளர் அலியார் பைஸர், கல்முனை பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட், அம்பாறை மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் பொருளாளர் எம்.ஐ.எம்.ஏ.மனாப், பறகத் நிறுவனத்தின் நிர்வாக முகாமையாளர் பி.எம்.எம்.குறைஸ், கொள்வனவு முகாமையாளர் எம்.எஸ்.எம்.சாதிக் ஆகியோருடன் ஊடகவியலாளர்களும். பாடசாலைகளின் விளையாட்டு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -