போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் வாழைச்சேனை பொலிசாரால் கைது..!

ஹைதர் அலி-
ட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துறைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது கலீல் முஹம்மது ஹம்ஸா மற்றும் மாவடிச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஹனீபா முஹம்மது அஜ்மீர் (police T-Shirt அணிந்திருப்பவர் போதைப்பொருள் மாத்திரை வியாபாரி) ஆகிய இருவரும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓட்டமாவடி-01, மௌலானா வீதியில் வைத்து 2000 போதைப்பொருள் மாத்திரைகளுடன் 2016.04.19ஆந்திகதி (செவ்வாய்கிழமை) இரவு இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இச்சுற்றி வளைப்பினை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்புக்கு பொறுப்பான உப பொலிஸ் அட்சியட்சகர் அமீர் அலி அவர்களின் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜுனைட், இஸ்மாயில் ஆகியோர் மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் 2016.04.20ஆந்திகதி புதன்கிழமை (இன்று) வாழைச்சேனை நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அண்மைக்காலமாக இப்பிரதேசங்களில் போதைப்பொருள் மாத்திரைகளுக்கு இளைஞர்களும், பாடசாலை மாணவர்களும் அடிமையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமன்றி இம்மாத்திரைகளுக்கு அடிமையாகும் இளைஞர்கள் மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் தெரியவருகின்றது. 

எனவே இவ்விடயத்தில் பள்ளிவாயல்கள், சமூக சேவை தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கூடுதல் அவதானம் செலுத்துதல் இன்றியமையாத தொன்றாகும் . ஒரு கால கட்டத்தில் தலைநகரில் ஆட்கொண்டிருந்த போதைப்பொருள் பாவனை இன்று கிராம மட்டங்களிலும் ஆழமாக ஊடுருவியிருப்பது ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியதொன்றாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -