கிராம உத்தியோகத்தரின் கொலைக்கு கண்டனம்..!

த.நவோஜ்-
ட்டக்களப்பு மகிழுர் பிரதேசத்தில் கடந்த 15.4.2016 அன்று கொல்லப்பட்ட கிராம உத்தியோகத்தரின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

மாவட்ட செலயகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.தவராஜா, மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் ஏ.ரங்கநாதன் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது கடந்த 15.4.2016 அன்று கொல்லப்பட்ட மகிழூர் பிரதேசத்தைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர் சோமசுந்தரம் விக்னேஸ்வரனின் கொலையை கண்டித்ததுடன் அதற்கான நீதியான விசாரணையை நடாத்த வேண்டுமெனவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அரச உத்தியோதக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நீதியான விசாரணை வேண்டும், அரசாங்க உத்தியோகத்தர்களுக்க எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறையை நிறுத்து, அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எதிரான அநாமோதய துண்டுப்பிரசுரங்களை வெளியிடுவோரை கண்டு பிடிக்க பொலிஸ் அக்கறை காட்ட வேண்டும் என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் தாங்கியிருந்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -