துப்பாக்கிகள் உற்பத்தி செய்யும் நிலையமொன்று பொலிஸாரால் சுற்றிவளைப்பு...!

க.கிஷாந்தன்-
துப்பாக்கிகள் உற்பத்தி செய்யும் நிலையமொன்றினை கண்டுபிடித்த பொலிஸார், விற்பனைக்கு தயாராக இருந்த 14 துப்பாக்கிகளையும், துப்பாக்கிகளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் பெருமளவிலான உதிரிப்பாகங்களையும், 05.04.2016 அன்று பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மொனராகலைப் பகுதியின் பாலாறு என்ற இடத்திற்கு அண்மையிலான கூட்டின் மத்தியில் அமைந்துள்ள வீடொன்றில், சூட்சுமமான முறையில், மேற்படி துப்பாக்கிகள் உற்பத்தி செய்யும் நிலையத்தை, பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.

மொனராகலைப் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலொன்றினையடுத்து, குறிப்பிட்ட இடத்தை 05.04.2016 அன்று சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்து 14 துப்பாக்கிகளையும், உதிரிப்பாகங்களையும் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் அந்நிலையத்திலிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்படி துப்பாக்கி உற்பத்தி நிலையம் தொடர்பாக, மொனராகலைப் பொலிஸார் தீவிர புலன் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -