ஷபீக் ஹுஸைன்-
அல்குர்ஆன் சுமந்து வரும் தூதை இந்நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் ஆய்வின் அடிப்படையில் தெளிவுபடுத்தும் நோக்கில் 'அஷ்ரப் அல்குர்ஆன் ஆய்வு மையம்' எனும் நிறுவனம் உலமாக்களின் ஆலோசனையுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் கடந்த வியாழக்கிமை (28) ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
தாருஸ்ஸலாமில் நடைபெற்ற உலமாக்களுடனான சந்திப்பின் போதே, உலமாக்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் இந்நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் எதிர்கால வேலைத்திட்டங்களை வடிவமைக்கும் நோக்கில் செயற்குழுவொன்றும் இக்கலந்துரையாடலின்போது நியமிக்கப்பட்டது.
இந்நிறுவனத்தின் ஊடாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி அல்குர்ஆன் மாநாடு ஒன்றும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்தோடு எதிர்வரும் காலங்களில் சர்வதேச அல்குர்ஆன் ஆய்வு மாநாடு ஒன்றை நடத்துவதுதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.