கட்டார் சென்ற அக்கரைப்பற்று இளைஞனுக்கு நடந்த சம்பவம் - அவதானம்

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று என்னும் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் கட்டாரில் புதன் கிழமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கட்டார் விமான நிலையத்தில் வைத்தே இவர் கட்டார் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்

இவ் இளைஞரின் கைது தொடர்பில் அறியவருவதாவது.

அக்கரைப்பற்று மாநகர சபையின் – 03ஆம் பிரிவைச் சேர்ந்த இவ்விளைஞன் தனது விடுமுறையை ஊரில் முடித்துக் கொண்டு கட்டார் திரும்பியுள்ளார்.

இவர் கட்டார் செல்லும் போது இவரது நண்பர் ஒருவரின் பெற்றோர் கட்டாரில் வேலைபார்க்கும் தமது மகனின் நோய்க்காக சில மருந்துகளை இவ்விளைஞனிடம் கொடுத்து அனுப்பிவைத்தள்ளனர்.

இவ்விளைஞனும் அவைகளை எடுத்துக் கொண்டு கட்டார் சென்றுள்ளார். கட்டார் விமான நிலையத்தில் வழமை போன்று இவரது பொதிகளையும் சோதனையிட்ட போதே எல்லோருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

இவர் கொண்டு வந்த மருந்துகளை அவதானித்த கட்டார் குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் அதனை சோதனையிட்டனர். இம்மருந்துகள் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மருந்துகள் தொடர்பில் பூரணமான விளக்கம் இவ்விளைஞரிடமிருந்து கிடைக்கவில்லை. 

இதனால் மருத்துவரின் மருந்து சான்றிதழை அதிகாரிகள் கேட்டுள்ளனர். எனினும் இவ்விளைஞனிடம் மருத்துவ சான்றிதழும் இருக்கவில்லை.

இதன் காரணமாக இவ்விளைஞன் கொண்டு வந்த மருந்துகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்த அதிகாரிகள் மருத்துவ அறிக்கையை பார்த்து அதிர்ந்து போய்விட்டார்கள்.

ஏனெனில் இவ்விளைஞன் ஊரிலிருந்து கொண்டு வந்த மருந்துகள் கட்டாரில் தடைசெய்யப்பட்டவையாகும்.

இதன் காரணமாக இவ்விளைஞன் கட்டார் பொலிசாரால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டு தற்போது சிறையில்; வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இன்னும் ஒரு சில தினங்களில் இவரை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைக்கவும் கட்டார் குடியவரவு குடியகழ்வு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இவர் தன்னகத்தே வைத்திருந்த மருந்துகள் கட்டாரில் தடை செய்யப்பட்டுள்ளவை என்பதினால் இவரது கடவுச்சீட்டை குற்றவியல் பட்டியலில் சேர்த்துள்ளதுடன் மத்திய கிழக்கில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இனிமேல் பயணிக்க முடியாதவாறு அவரது கடவுச்சீட்டும் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக கட்டார் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இவ்விளைஞனை வெளியில் கொண்டு வருவதற்கு இவரது கட்டார் நண்பர்கள் பல முயற்சி எடுத்தும் பயணளிக்கவில்லை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -