கரும்பு உற்பத்திக்காக காவு கொள்ளப்பட்ட நுரைச்சோலை விவசாயிகள் - கண்ணீரை பருகிறார்களா அமைச்சர்கள்..?

அஸ்மி அப்துல் கபூர்
காமினி திசாநாயகா காணி அமைச்சராக இருந்த போது ஐக்கிய தேசிய கட்சியின் முஸ்லீம் அமைச்சர்களின் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சரவைக்கு பத்திரம் சமர்பிக்கப்பட்டு சுமார் 350 ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டதே நுரைச்சோலை கண்ட விவசாயிகளின் வேளாண்மை பயிர் செய்கைகான நிலம்.

தங்களின் நிலத்தில் தாங்களே உழுது நெல் வயல் செய்து காலத்த யும் ஜீவனோபாயத்தையும் ஓட்டி சென்றனர். இன்று அம் மக்களின் நிலை என்ன? நிலத்தை சீனிக்கூட்டுத்தாபனத்துக் கு பறிகொடுத்து நீதிமன்ற வாசலில் காத்துக்கிடக்கிறார்கள்.

சமுகத்தின் தேசிய தலைவர்களாக தங்களை சித்தரிக்க எடுக்கின்ற பிரயத்தனங்களை ஏன் மக்கள் நலனில் எம் தலைவர்கள் காட்டவில்லை.

இன்று இது யாருடைய அமைச்சி னோடு சம்பந்தப்பட்டது. ரிசாட் அமைச்சரால் தீர்க்க கூடிய விடயமல்லவா? ஏன் கால தாமதப்படுகிறீர்? நல்லாட்சியின் பங்காளிகள் நாமல்லவா? எம்மால் சட்டரீதியாகவும் மனிதபி மான அடிப்படையிலான விஷயத்தை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது.

ஒரு போக விவசாயம் பாதிக்கப்படுவது அவர்களது குடும்ப சராசரி வாழ்கையில் எவ்வகையான தாக்கங்களை ஏற்படுத்தி மக்களின்  வாழ்வை சிதைத்துவிடும் நாம் உணரமாட்டோமா?

எத்தனை போகமாக விவசாயிகள் கண்ணீரோடு அலைகிறார்கள் உயர மாட்டோமா?  காமினி திசாநாயக்காவுக்கு இருந்த முஸ்லீம்கள் மீதான அக்கறை எமக்கில்லாமல் போனதேன்? எம்.எச்.முகம்மது போன்ற தலைவர்
களுக்கிருந்த சமுக அக்கறை எமக்கில்லாமல் போனது ஏன்? அமைச்சர்களாக பொருப்பான பதவிகளில் நீங்களல்லாம் அமர்ந்திருக்க விவசாயிகள் செய்த கடுமைதான் என்ன?

தலைவர்களே! அம்பாரை மாவட்ட த்திலுள்ள ஒரு துண்டு நிலத்தை யாவது அம்பாரை அமைச்சரின் அனுமதியின்றி பேச கூட உங்களால் முடியாது.நச எமக்கான எம்முள் இருக்கிற வளங்களை பெற முடியாதோர் எவ்வாறு ஆக்கிரமிப்புகளை சரி செய்து தருவார்கள்? போராட்டங்கள் நடத்தி ,வீதிகள் மறியல் செய்து ,உண்ணாவிரதமி ருந்து பெற வேண்டுமென்றால் தலைவர்களும் அமைச்சர்களும் எதற்காக? இது எமது பொருளாதாரத்தை வறி
தாக்கின்ற மோசமன முன் மாதிரியாகும்.

கரும்பு செய்கை பண்ணி எமது சமுகம் இதன் முன் நாம் அறிந்த  நட்டத்தை சரி செய்ய அவர்களுக்கு வாழ்வளியுங்கள் முஸ்லீம் அமைச்சரிகளின் பல கோடி பெறுமதிகயான வாகன தொடரனியை பார்த்து ஏப்பம் இடுகிற சமுகம் இல்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -