முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி அவர்கள் கட்சி ஆரம்பித்து பல வருடங்களின் பின்னர்தான் எங்களுடன் இணைந்து கொண்டவர். இக்கட்சி 1980ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ம் திகதி காத்தான்குடியில் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை இருக்கின்ற ஒரேயொரு ஸ்தாபக உறுப்பினரும் அக்கட்சியில் ஆணிவேரும் இந்த எஸ்.எம்.ஏ. கபூர்தான், வேறு எவரும் இக்கட்சியில் இப்போது எம்முடன் இல்லை, பலர் மரணித்துவிட்டார்கள் இன்னும் சிலர் கட்சியை விட்டு விலகிவிட்டார்கள் என அக்கட்சியின் ஸ்தாபகபொதுச் செயலாளரும் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார்.
ஒலுவில் துறைமுக உல்லாச விடுதியில் இடம்பெற்ற மு.கா.வின் பொத்துவில் தொகுதி மத்திய மாவட்ட குழு உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து அவர் பேசுகையில் ,
எமது கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது ஹசன் அலி அவர்கள் இந்நாட்டில் இருக்கவில்லை எனவும் அவர் வெளிநாட்டில் தொழில் புரிந்துவந்தவர் இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு பலவருடங்களின் பின்னர்தான் கட்சியோடு வந்து இணைந்து கொண்டவர் எனவும் தெரிவித்தார். இதுதான் உண்மையான ஆரம்பகால வரலாற்று சம்பவமாகும்.
அட்டாளைச்சேனை பிதேசம் சுமார் 30 வருடங்களாக பாராளுமன்ற பதவி இல்லாமல் அநாதையாகவிடப்பட்டுள்ளது. அப்பிரதேசமக்கள் கடந்த பல பொதுத் தேர்தல்களில் கனிசமான வாக்கு வங்கி மூலம் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்து வந்தபோதும் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் இதுவரை இக்கட்சியால் வழங்கப்படவில்லை என்பதுமிகவும் மனவருத்தத்திற்குரியதே.
இதேபோன்று இன்னும் பலபிரதேசங்கள் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியைகேட்டுக் கொண்டிருக்கின்றது. இதேவேளையில் சகோதரர் ஹசன் அலி அவர்கள் பலமுறை இத்தேசியப் பட்டியலுக்கான நியமனத்தை பெற்றிருந்தும் இம்முறையும் மீண்டும் தனக்கு அந்த கௌரவத்தை வழங்கியிருக்க வேண்டுமென கட்சிக்கு எதிராககோசமெழுப்பிக் கொண்டிருக்கின்றார். அத்துடன் இன்னும் சிலபல காரணங்களையும் கூறிக்கொண்டிருக்கின்றார். இதனை எவ்வாறு நாம் நியாயப்படுத்த முடியும் என கேட்கவிரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்றுள்ள மாகாணசபை அமைச்சர் ஏ.எல்.எம். நஸீரோ அல்லது பீ.ஏ. பழீல் அவர்களோ இக்கட்சியில் அப்போதிருக்கவில்லை. 1989ம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸின் முதல் தேசியப்பட்டியலில் முதன் முதலாக முதலாவது இடத்தில் எனது பெயர் இருந்தது. அன்றுமுதல் இன்றுவரை நடைபெற்ற எல்லாப் பொதுத் தேர்தல்களிலும் சமர்ப்பிக்கப்பட்ட தேசியப் பட்டியலில் எனதுபெயர் தொடர்ந்து சிபார்சு செய்யப்பட்டிருந்தும் இதுவரை எனக்கான இந்நியமனம் கிடைக்கவில்லை. நாங்களும் பொறுமையாகத்தான் இருந்து வருகின்றோம். இக்கட்சிக்கு பெயர் வைத்து அதனை பதிவுசெய்து, நாடுபூராகவும் சென்று இக்கட்சியை முதல் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் நாங்கள்தான்.
இவ்விடயங்கள் பற்றி பலமுறை எமதுகட்சித் தலைவர் றஊப் ஹக்கிமிடம் கதைத்திருந்தேன் அத்துடன் மறைந்த தலைவரின் இறுதிவிருப்பாவணக் குறிப்பில் எனது பெயருடன் தலைவர் ஹக்கீம் அவர்களை சபாநாயகராகவும் நியமிக்கவேண்டுமேன மறைந்த தலைவர் மறைவதற்கு முன்பு எழுதிய அவரின் இறுதி ஆவணத்தில் கூட தெரிவித்திருந்ததையும் நான் குறிப்பாக எடுத்துக்கூறி அதனையும் அவரிடம் காட்டினேன்.
ஆனால் தலைவரோ ஹஸன் அலிதான் திரும்பவும் கேட்டு தொல்லைப்படுத்துகிறார் என கூறினார். இதுபற்றி ஹஸன் அலி அவர்களிடமும் கதைத்தபோது பள்ளியில் தீர்மானம் எடுத்துவாருங்கள் என எங்களுக்கு அறிவுரை கூறினார். ஆனால் அவருக்கு இந்த நியமனங்கள் பலமுறை வழங்கப்பட்டபோது எந்தப் பள்ளியில் எப்போது தீர்மானம் எடுத்து உங்களுக்கு வழங்கப்பட்டது என கேள்விகேட்டேன். அல்லது மற்றவர்களுக்கு வழங்கப்பட்டபோதாவது பள்ளியில் தீர்மானங்கள் நிறைவேற்றியா இந்நியமனங்கள் வழங்கப்பட்டன என்ற வரலாறுகள் ஏதும் கட்சிக்குள் உண்டா? என வினவினேன். அதற்கு விடை இல்லை.
அவரவர் வசதிக்காகவும், வாய்ப்புகளுக்காகவும் கட்சிபற்றியும் தலைமைத்தவத்தை குறை கூறி கிழக்கிலங்கை முஸ்லிம்களுக்கான தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டுமென்ற புதுக் கோசமும் அண்மைக் காலமாக எதிரிகளால் எழுப்பப்பட்டுவருகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் முழு நாட்டு மக்களுக்கான தேசியகட்சியே அன்றி அம்பாரைமாவட்ட மக்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட மானிலகட்சியல்ல எனவும் தேசியரீதியில் இக்கட்சியில் பெயரை நாம் சூட்டியபோது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்றுதான் அதற்கு பெயரிட்டோம். அதற்கான ஆதாரபூர்வமான ஆவணங்கள் அத்தனையும் என்னிடம்தான் இப்போதும் உள்ளது. எவரும் தலையிருக்க வாலாட்ட முடியாது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக றஊப் ஹக்கீம்தான் இக்கட்சியின் தேசிய தலைவராக ஏகமனதாக எல்லோராலும் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்;ட ஒரு தலைமைத்தவத்தை பின்பற்றியே நாம் இன்றுவரை இவரின் பின்னால் இருந்து வருகின்றோம். புதிய கண்டுபிடிப்புக்களுக்கும் வியாக்கியாணங்களுக்கும் விளக்கங்களுக்கும் ஏனைய சதிகளுக்கும் ஒருபோதும் நாம் துணை போகமாட்டோம் ஹக்கீமின் தலைமைத்துவத்தை நாம் எல்லோரும் ஒன்றுபட்டு பலப்படுத்துவோம் எனவும் இச்சந்தர்ப்பத்தில் வலியுருத்தி தெரிவித்துக் கொள்ளவிரும்புவதாகவும் சட்டத்தரணி கபூர் குறிப்பிட்டார்.
மேற்படி கூட்டம் முஸ்லிம் காங்கிரஸின் தேசியதலைவரும் அமைச்சருமானறஊப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம் மற்றும் மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம் தவம், நிந்தவூர் ஆரிப் சம்சுதீன் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை பிரதிமேயருமான ஏ.எல். அப்துல் மஜீட், பொத்துவில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் ஜனாப் வாசித் அவர்களும் கலந்து கொண்டு கட்சித் தலைமைத்துவத்தின் கரங்களைப்பலப்படுத்தி அன்னாருக்கு விசுவாசமாக இருப்போம் என்ன தோரனையில் அவர்களும் இங்கு உரையாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment