காரைதீவு நிருபர் சகா-
கடந்த ஆண்டு (2015) க.பொ .த சாஃத பரீட்சையில் உயர்தரம் கற்க தகைமை பெற்ற மாணவர்களின் வலய மட்ட தரப் படுத்தலில் தமிழ் மொழி பாடசாலைகள் தேசிய மட்டத்திலும் மாகாணமட்டத்திலும் பெற்றுள்ள தரநிலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கையில் 98 கல்வி வலயங்களுள்ளன. தேசிய மட்டத்தில் 7வது இடத்தைப்பெற்று மட்டு.மத்தி வலயம் வடகிழக்கில் முதலிடத்தையும் தேசியரீதியில் இறுதி 98வது இடத்தைப்பெற்று திருகோணமலை வடக்கு வலயம் வடகிழக்கில் இறுதி 25வது இடத்தையும் பெற்றுள்ளது.
தரவரிசை இதோ!
அதன்படி வடக்குகிழக்கில் மட்டக்களப்பு மத்தி வலயம் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. இவ்வலயம் தேசியரீதியில் 07வது இடத்தைப் பெற்றுள்றது. இவ்வலயம் பெற்ற புள்ளி 77.7 வீதம் ஆகும்.
வடக்குகிழக்கில் 2வது இடத்தை அக்கரைப்பற்று வலயம் பெற்றுள்ளது. இவ்வலயம் தேசியரீதியில் 11வது இடத்தைப் பெற்றுள்ளது. இவ்வலயம் பெற்ற புள்ளி 76.32 வீதம்ஆகும்.
வடக்குகிழக்கில் 3வது இடத்தை கல்முனை வலயம் பெற்றுள்ளது. இவ்வலயம் தேசியரீதியில் 17வது இடத்தைப் பெற்றுள்ளது. இவ்வலயம் பெற்ற புள்ளி 74.13 வீதம் ஆகும்.
4வது இடத்தை யாழ்ப்பாண வலயமும் 5வது இடத்தை மன்னார் வலயமும் 6வது இடத்தை மட்டக்களப்புவலயமும் 7வது இடத்தை வவுனியா வலயமும் 8வது இடத்தை வடமராட்சி வலயமும் 9வது இடத்தை மடு வலயமும் 10வது இடத்தை சம்மாந்துறை வலயமும் பெற்றுள்ளது.
11.திருக்கோவில் 12.திருகோணமலை 13.பட்டிருப்பு 14.வலிகாமம் 15.தென்மராட்சி 16.கல்குடா17.கிண்ணியா 18.வவுனியாவடக்கு 19.மூதூர் 20.முல்லைத்தீவு 21.துணுக்காய் 22.மட்டு.மேற்கு 23.கிளிநொச்சி 24.தீவகம் 25.திருமலை வடக்கு.
முதல் 10 நிலைகளுள் கிழக்கு மாகாணத்திலிருந்து 05வலயங்களும் வடக்கு மாகாணத்திலிருந்து 05வலயங்களும் தெரிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.