யோஷித்தவிற்கு சொந்தமான கோடிக்கணக்கான பெறுமதியான சொத்து பற்றிய தகவல்கள் வெளியாகின..!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்சவுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்து பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதியுடன் நடத்தப்பட்ட தேடுதலில், இலக்கம் 173/2 மிஹிந்து மாவத்தை, தெஹிவளை என்ற விலாசத்தில் உள்ள 5 மாடியுடன் கூடிய ஆடம்பர வீடும் இரண்டு மாடிகளை கொண்ட மற்றுமொரு வீடும் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வீடுகளையும் நிர்மாணிப்பதற்காக காணியை கொள்வனவு செய்ய 4 கோடியே 90 லட்சத்து 20 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

ஆடம்பர வீடுகளாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீடுகளில் 4 மாடிகளை கொண்ட வீட்டில் நிலத்தடியிலும் அறை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடுகளில் பெறுமதி இதுவரை கணக்கிடவில்லை என்ற போதிலும் அவற்றின் பெறுமதி சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடுகள் 68 பேர்ச்சஸ் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதில் 37 பேர்ச்சஸ் காணி யோஷித்த ராஜபக்சவின் பெயரில் இருப்பபதாக கூறப்படுகிறது.

மீதமுள்ள 28 பேர்ச்சஸ் காணி இலக்கம் 260/12 டொரிங்டன் மாவத்தை கொழும்பு 5 என்ற விலாசத்தில் இருக்கும் வயோதிப பெண்மணிக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட போதிலும் அவ்வாறான பெண்மணி அங்கு இல்லை எனக் கூறப்படுகிறது.

எனினும் இந்த காணி 2013 ஆம் ஆண்டு ஷிராந்தி ராஜபக்சவின் அத்தையின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டு, பின்னர், யோஷித்த ராஜபக்சவின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -