எம்.ரி.எம்.யூனுஸ்-
காத்தான்குடி தள வைத்தியசாலையின் பற்சிகிச்சை நிலையத்திற்கான மருத்துவ உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பதின் மூன்றரை இலட்சம் பெறுமதியான பற்சிகிச்சை நிலையத்திற்கு தேவையான வைத்திய உபகரணங்களை கெளரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் அவர்களினால் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக தள வைத்தியசாலையில் நிலவும் ஆளனிப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வது சம்மந்தமாகவும் 350 ஊழியர்கள் தேவைப்பட்டபோதும் குறைந்தளவிலான ஆளனியினரே காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது. எதிர்காலத்தில் இதனை நிவர்த்தி செய்ய தன்னால் இயன்ற முழுப் பங்களிப்பினையும் செய்வேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் குறிப்பிட்டார்.
நிகழ்வுக்கு முன்னால் நகர சபை தவிசாளர் மர்சூக் அஹமட் லெப்பை ஊர்ப் பிரமுகர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.