மட்டக்களப்பு ஏறாவூரில், ஜனாதிபதி மைத்திரி மக்களுக்கு தெரிவித்த முக்கியமான விடயங்கள்..!

 த.நவோஜ்-
நாட்டைப் பிரிப்பதற்கு பலரும் முன்னின்று முயற்சிக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் ஒன்றைக் கூறி வைக்க விரும்புகிறேன். நாட்டு மக்களுக்குத் தேவையானதையே நாம் வழங்க வேண்டும் மக்களுடைய தேவையை சமாதானத்தை வழங்குவதற்கு ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூரில் கிழக்கு ஆடைத்தொழிற்சாலையை நேற்று (01) மாலை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் -

இந்தப் பிரதேசம் எனக்கு புதியதல்ல. உங்களுடைய அடுத்த மாவட்டத்தில் தான் இருக்கிறேன். நான் பிறந்து வாழ்ந்தது அடுத்த மாவட்டததிலே தான். நான் இந்த பகுதக்கு 25- 30 வருடங்களாக வருகின்றேன். அதற்கு முன்னர் பாடசாலைக்கு செல்லும் போது வந்தேன். பொலநறுவையில் கல்வி கற்கும் போது நண்பர்களுடன் இணைந்து துவிச்சக்கர வண்டியில் வந்தேன்.

30 ஆண்டுகளாக எனக்கு தெரிந்த அனுபமான பிரதேசம் இது. கடந்த ஜனவரி 8ம் திகதி எனக்கு பாரிய ஒத்துழைப்பை வழங்கினீர்கள். எனவே இந்த நாட்டில் மாற்றம் ஒன்றினை உருவாக்க வழங்கிய ஆதரவுக்கு நன்றி.

எனக்காக வாக்களித்த மக்கள் எனக்கு ஒரு வேண்கோள் விடுத்தார்கள். என்னிடம் உணவு, உடை இல்லை என்று சொல்லவில்லை. பாரிய ஒன்றை சொன்னார்கள். எனக்கு உணவு உடை இருந்தாலும் கூட சுதந்தரமாக வாழக்கூ டிய சூழலையே உருவாக்கச் சொன்னார்கள்.
அன்று சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் பயந்துடன் வாழ்ந்தார்கள். சுதந்திரமாக வாழவில்லை. சுதந்திரமாக தொலைபேசியில் கூட பேசவில்லை. தொலைபேசியில் பேசும் போது கூட இரகசியமாகவே பேசினார்கள் ரப் செய்யப்படுகிறதா என்று பயந்தார்கள்.

இநத நாட்டு மக்கள் சுதந்திரமாக பேசக்கூடிய நிலை இல்லை. யுத்தம் முடிந்து நாட்டில் சமாதானம் இடம்பெற்றது. யுத்தம் முடிந்த பின்னரும் சந்தோசமின்றியிருக்கிறோம். இப்போதும் நாங்கள் அந்த சமாதானத்தை உருவாக்க கஸ்ரப்பட்டவர்கள் மக்கள் தான்.

எங்களுடைய முப்படைகளுக்கு பாதுகாப்பு வழங்க மக்கள் ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஆனால் அந்த சமாதானத்தை பற்றி நீண்டகால வைத்துக்கொள்ள வேண்டும். எங்களுக்கு துப்பாக்கியினால் நீண்ட சமாதானத்தை உருவாக்க முடியாது. நாட்டு மக்கள் மனதில் பல்வேறு பிரச்சனை உள்ளன. யுத்தம் ஏன் ஏற்பட்டது என பார்த்தோமா?.

பாதுகாப்பு படையைச் சேர்நத சிங்கள தமிழ் மக்கள் உயிரை இழந்தார்கள். எந்த மதம் என்று இல்லாமல் இறந்து மடிந்தார்கள். எனவே இந்த மக்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு கண்டார்கள். எனவே மீண்டும் யுத்தம் எற்படாத வகையில் பிரச்சனையை தீர்த்து வைக்கவே வேண்டும். எனவே அனைவருக்கும் அது சம்பந்தமாக பாரிய பொறுப்பு உள்ளது.

நீங்கள் இருப்பது இந்த கிழக்கு மாகாணத்திலே. சூரியன் உதிப்பது இப்பகுதியில் தான். அதேபோன்று நாட்டின் தலைநகரம் தென்மாகாணம் சூரியன் மறைவது அங்குதான்.

இந்த நாட்டிலே கிழக்கு மகாணத்திற்கும் மேற்கு மாகாணத்திற்கும் வித்தியாசம் உள்ளது. இந்த வித்தியாசத்தை காண்பது சூரியன் பகவான் மாத்திரம் தான் அவர் தான் நன்றாக எடுத்து கூறுவார்.

கிழக்கு மகாத்திற்கும் மேற்கு மகாhண அபிவிருத்தி சமமாக உள்ளதா? மேற்கு கிழக்கு மாகாண மக்கள் பொருளாதார நிலைமை சமமாக உள்ளதா? நாங்கள் கிழக்கு மகாhணத் மேற்கு மாகாணத்திற்கு உரிய பிரச்சனையை பார்த்தால் வித்திசாயகம் உள்ளது கல்வி வசதிகள் சமமாக உள்ளதா? மக்களுக்கு சுகாதார சேவை ஒரே மாதியாக வழங்கப்படுகின்றனவா? வாழ்கின்றன மக்கள் பொதுப் போக்குவரத்து வசதி சமமாக உள்ளதா அப்படியானால் இந்த பிரச்சனையை நாம் புரிந்து கௌ;ள வேணடும்.

எனவே வித்தியாசத்தை கால நிலையைப் பற்றி சொல்லலாம். எனவே இது காலநிலை பற்றிய பிரச்சனை அல்ல. ஐக்கிய அரபு இராச்சியத்தில் அவருடைய நாடு கஷ்ரமாக வெப்பமாக நாடு. அற்த பகுதி பாலைவனம் என்று சொல்லுகிறோம். அது முன்னேறறம் அடைந்துள்ளது.

எனவே இந்த வடக்கு கிழக்கு மேற்கு கிழக்கு வேறுபாடு இல்லை எல்லாம் ஒரேமாதிரயாக அபிவிருத்திடையவேண்டும். எல்லாம் சமமாக வழங்க வேண்டும். இந்தவித வேறுபாடு இன்றி சந்தேசமாக வாழ்வதற்கு எங்களது அரசை தேரர்தெடுத்துள்ளீர்கள். மீண்டும் துப்பாக்கிய ஏந்த இடமளிக்க கூடாது. இந்த நிலைமை வர அபிவிரத்தி செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் ஐந்து பேரும் ஒரே மாதிர வாழ வேண்டம்.

எனவே வாழக்கூடிய மக்கள் எல்லோரும் சந்தோசமாக வாழ் நாம் உருhவாக்க வேண்டும். சிங்கள பௌத்த மக்கள் வாழ வேண்டமானால் தமிழ் முஸ்லிம் மக்கள் பிரச்சனை திர்க்கப்பட வேண்டும். அனைவரும் எங்களுடைய பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும்.

அதை நாங்கள் இவ்வாறு செயற்படும் போது சிலர் நாட்டைப் பிரிக்க போகின்றோம் என்று, நாட்டை காட்டிக் கொடுக்கின்றோம் என்று, சர்வ தேசத்திற்கு அடிபணியப் பேகின்றோம் என்று சொல்லிக்னிற்னர். நாட்டைப் பற்றி வேதனை எங்களுக்கு இருக்கின்றது.

இந்த பிரச்சனைகளை பார்த்து பேசுவதற்க எமது கடமை அபிவிருத்தி செய்ய சமாதாகனத்தை ஏற்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேணடும். நாட்டை கட்டியெழுப்பு சகோதரத்துடன் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று செர்ந்து அழைப்பு விடுகின்றோம் அனைவரும் சமாதானத்துடன் வாழ்வோம் அவ்வாறு பிரிக்க போனால் கண்ணீர் வர நேரிடும்.

தன்னை பற்றிச நிதிக்க வேண்டும். என்று குறிப்பிடவில்லை. எல்லோரும் பிரச்சனையை பகிரிந்து செய்றபட டீவேண்டும் பௌத்த தத்துவம் சொல்கின்றது. எல்லோரும் ஒரே நோக்கத்திற்காக செயற்பட முடியும். அரசாங்கள் தொடர்ந்து போக முடியாது என்கினறார். அவர்களுடைய கனவு நனவாகாது என்று சொல்லுகின்றேன். அரசாங்கத்திற்கு இல்லாமல் செய்ய போராடுவதை விட இருக்கின்ற அரசாங்கத்துடன் இணைந்து போராட வருமாறு அழைப்பு விடுகின்றேன்.

2030ம் ஆண்டு கிழக்கு மாகாணம் எவ்வாறு இருக்கவேண்டும் என தொலைநோக்கை அறிமுகப்படுத்தினால். இதேபோன்று இலங்கை ஒரு இலக்கை அடைய அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

இங்கு வேலை செய்யும் பெண்களை பார்த்தால் சந்தோசமாகவுள்ளது. அவர்கள. மத்தியில் இனமத மின்றி செயற்படுகின்றார்கள். அந்த யத்திரம் தமிழ் எனறோ முஸ்லிம் என்றோ சொல்லாது. இது நாட்டு மக்களுக்குத் தெரியாது.

கிழககு மாகாண சபை நல்லிணக்கத்தை சான்றாகத் திகழ்கிறது. அந்த அமைப்பை சக்திமயப்படுத்த வேண்டும். எல்லா கம்பனிகளையும் சேர்நதவர்கள் ஒன்றாக வேலை செய்கின்றார்.

அரச என்ற வகையில் ஆதரவு வழங்குவோம். ஒன்பது மாகாணமும் சமமாக அபிவிருததி வேண்டும். பொருளாதாரத்தை டேறம்படத்த உற்பத்தியை மேம்படுத்த வேண்டும். இந்த நாட்டில் எல்லாத்துறையினரும் சேவையாற்ற வேண்டும்.

தன்னுடைய நேர்மையாக அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வேண்டும். பொதுவான இலக்கு இருக்கின்றது. நாளைய நாள் நல்ல நாளாக மாற்றுவோம். உலக்த்திற்க நாடுக்ள அவ்வாற முன்னேறியுள்ளது. நாளை பிறக்கும் பிள்ளைகளுக்கு கட்டியெழுப்ப வேண்டியது நமது கடமை' என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -