அம்பாரையில் முஸ்லிம் பள்ளிக்குத் தடை - சம்பந்தப்பட்ட இடத்தில் சபீஸ்

டந்தவாரம் அம்பாரை நகர் முழுவதிலும் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளியை தடுத்து நிறுத்த பௌத்தர்கள் ஓன்று சேருமாறு பாரிய விளம்பரங்கள் செய்யப்பட்டது இந்த அழைப்புக்கு அம்பாரை நகரில் உள்ள 8 பன்சளைகளின் தலைமை மதகுருமார் முன்னிலை வகித்து அழைப்பு விடுத்திருந்தனர்.

அரசியலமைப்பு சட்டத்தில் ஒருத்தர் தனித்தோ அல்லது கூட்டாகவோ மார்க்க பயிற்சியில் ஈடுபடலாம் என்று கூறப்பட்டிருந்தாலும் யுத்ததிற்கு பிற்பாடு பேரினவாத மக்களுக்கு அடிமைப்பட்டே சிறுபான்மையினர் தமது மார்க்க கடமைகளை மேற்கொள்கின்றனர் என்பது மறைமுகமான உணமையாகும்.

சிங்கள கடும்போக்காளர்களும் உணர்சி ஊட்டப்பட்ட பௌத்தர்களும் வெளிஊர்களில் இருந்து பஸ்களில் கொண்டுவரப்பட்ட காவி உடை அணிந்த காடையர்களையும் கொண்டு பாரியதொரு ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்வாறான ஆர்பாட்டம் நடைபெறுவதற்கு அம்பாரை நகரில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதனை ஆராய்ந்து பார்த்தார்களா? என்பது சந்தேகத்துக்கிடமானதாகும்.

நடந்தது என்ன?

அம்பாரை நகரில் வாழும் முஸ்லிம்களில் 70 வீதமானோர் மலே முஸ்லிம்களாவர் இவர்கள் அனைபேரும் அம்பாரை ஜும்மா பள்ளிவாசல் ஜமாதுடோயர் ஆகும், அம்பாரை நகரம் முன்னேறி இருந்தாலும் இப்பள்ளிக்கு தொழுகைக்காக அங்கு தூரத்தில் இருந்துவரும் முஸ்லிம்கள் மனித நடமாட்டம் அற்ற போதிய வெளிச்சமில்லாத காடுகள் படர்ந்த பாதைகளையும் தாண்டி வரவேண்டியது கட்டாயமானதாக காணப்படுகிறது.

இவ்வேளையில் மலே முஸ்லிம்கள் அமைப்பின் தலைவராக காணப்படும் 67 வயதுடைய யூசூப் என்பவர் நோன்பு காலங்களில் பெண்கள் தாராவிஹ் தொழுகைக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதன் காரணத்தால் தனது வீட்டின் வரேவேற்பரையில் தொழுகையை நடாத்தி வருவதோடு ஒரு மௌலவியைக் கொண்டு அப்பகுதி சிறார்களுக்கு குரான் ஓத கற்றுக்கொடுத்தும் வருகிறார்.

தான் சீனிக்கூட்டுத்தபான தொழிலில் இருந்து ஓய்வு பெற்றதனாலும் தனது பிள்ளைகள் வளர்ந்து திருமணம் முடித்ததனாலும் தொடர்ந்தும் இப்பணியை தனது வீட்டில் செய்வதற்கு போதிய இடவசதி இல்லாமையினால் தனதும் தனது சகோதரனின் வீட்டுக்குப் பின்னாலும் உள்ள 6பேர்ச்சஸ் நிலத்தினை அரசாங்கத்திடமிருந்து உரியமுறையில் பெற்று சட்டதிட்டங்களுக்கு அமைவாக 20*20 அளவான ஒருசிறிய கட்டடத்தை மக்களின் உதவியோடு சுமார் 3வருடாமாக கட்டி வருகின்றார் இப்போதுதான் முடியும் தருவாயில் உள்ளது ,

பிரச்சினை எவ்வாறு தோற்றம்பெற்றது;

மலே முஸ்லிம் அமைப்பின் தலைவர் யூசூப் அவர்களின் சகோதரரின் மகனான ரமீஸ் என்பவர் தமது வீட்டுக்கு பின்னால் கட்டப்படுகின்ற கட்டடத்தையும் இடத்தினையும் தனதாக்கிக் கொள்ள நினைத்தார் அதற்காக அப்பிராந்தியத்தில் உள்ள பன்சலைகளின் தலைமை மதகுருமார்களை சந்தித்தார், இவ்விடத்தில் ஒருபள்ளிவாசல் கட்டப்படுகிறது அதற்கு சியா அமைப்பு நிதி வழங்க்குகிறது என பொய் முடிச்சுக்களை அவிழ்த்து விட்டார்.

இதன் உண்மைகளை அறிந்துகொள்ளாத மதகுருமார் அங்குள்ள பௌத்த சங்கங்களின் தலைவர்களை அழைத்து உரையாடி உடனடி ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

அம்பாரை நகரமே கொந்தளிதுப்போன நேரத்தில் முஸ்லிம் கட்சித்தலைவர்கள் என்றளைக்கப்டுபவர்களில் ஒருத்தர் சோறு ஆக்கிக் கொடுத்துக் கொண்டும் இன்னொருத்தர் சுகவீனம் அற்றோருக்கு சிறு உதவிகளை செய்து விளம்பரப்டுத்திக் கொண்டும் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் இருந்து கொண்டு தமது கட்சிக்கு ஆள்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இத்தருணத்தில் அக்கரைப்பற்ரைச்  சேர்ந்த எஸ்.எம்.சபீஸ் என்பவரை பாராட்டியே ஆகவேண்டும் பிரச்சினையை அறிந்தவுடன் சம்பந்தப்பட்ட இடத்துக்கு உடனே சென்றார். அம்பாரை ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களை சந்தித்தார் அதேபோன்று புதிய கட்டிடத்தை நிர்மாணித்த யூசூப் அவர்களையும் சந்தித்து அவ்விடத்தினையும் பார்வையிட்டார்.

பெரிய தந்தையோடு பேசித்தீர்க்க வேண்டிய பிரச்சினையை பூதாகரமாக்கிய ரமீசையும் சந்தித்தார் அவ்வேளை அடாவடியில் ஈடுபட்டு இவ்விடத்தினை புல்டோசர் கொண்டு இடித்து தள்ள வேண்டும் என சர்ச்சை செய்த ரமீசை ஆசுவாசப்படுத்தி நிதானமாக சிந்திக்க வைத்தார் அவருக்கு இவ்விடத்தில் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்பிரச்சினை மாவட்ட ஆட்சியாளரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் மார்க்க கடமைகள் எதிலும் ஈடுபடமாட்டோம் என்ற அம்பாரை ஜும்மா பள்ளி வாசல் நிருவாகத்தினால் வழங்கப்பட்ட எழுத்துமூல உறுதிப்பாட்டுக்கு அமைவாக ஆர்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.

கெமுனுபுற என்ற ஒருகிராமத்தில் தேடிக் கண்டுபிடிப்பதற்கே கஷ்டமான ஒரு உள் ஒழுங்கையில் முன்வீட்டுக்கு பின்னால் உள்ள ஒரு சிறிய பகுதியில் சிறிது சிறிதாக பணம் சேர்த்து 15 பிள்ளைகள் அமர்ந்து குரான் ஓதக்கூடியதான ஒரு இடத்தினை ஏதோ நகரத்தின் முன்புறத்தில் கோடிக்கணக்கில் பணம் செலவிட்டு பள்ளி கட்டுவதுபோல் சர்ச்சையை உண்டு பண்ணிய மக்களை நான் என்வென்று சொல்வது என யூசூப் எங்களைப்பார்த்து கேள்வி எழுப்பினார்.

பாரியதொரு இனக்கலவரத்துக்கு வித்திட தொடங்கிய ஆர்பாட்டம் இடைநிறுத்தப்பட்டாலும் அப்பகுதியில் வாழும் முஸ்லிம் மக்கள் முறையான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது நீதியற்றதே.

அம்பாரை நகர் முழுவதிலும் புதிதாக உருவாக்கிய முஸ்லிம் பள்ளியை தடுத்து நிறுத்திவிட்டோம் என முகநூல்களிலும் துண்டுப் பிரசுரங்களிலும் அம்மக்கள் கொண்டாடுவதை காணக்கூடியதாக உள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -