இருதய சிகிச்சைக்கு உதவிகோரும் மாணவியின் துயர் துடைக்க வாருங்கள் உறவுகளே (படங்கள்)



எஸ்.எம்.சன்சீர்

மட்டக்களப்பு மாவட்டதின் படுவான் கரைபிரதேசத்தில் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முதலைக்குடா (மேற்கு) கிராமத்தைச் சேர்ந்த த.பவதாரணி என்ற இந்த மாணவி சிறுவயதில் இருந்து இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

குடும்ப வறுமை மற்றும் கடந்த கால யுத்த சூழ் நிலையினால் தகுந்த சிகிச்சை பெற முடியாத நிலையில் பெற்றோர் இவ் மாணவியை பாதுகாத்து வந்துள்ளனர்.ஆனாலும் மாணவிக்கு ஐந்து வயதில் ஏற்பட்ட இருதய நோய்யின் அறிகுறியால் பெற்றோர் அரச வைத்திய சாலைக்கு கொண்டு சென்று பரிசோதித்து மாணவியின் இருதய நோய்யினை குணப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.ஆனால் இருதய சத்திர சிகிச்சை செய்வதக்கு வைத்தியர்களால் பெருமளவு பணம் தேவைப்படுவதாக கூறியபின்பு பெற்றோர் பல பணம் படைத்த செல்வந்தர்களை நாடியும் அதர்க்கான பணம் கைகூடவில்லை.

அதன் பின்பு பல அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியை நாடியும் 2001 ஆண்டு தொடக்கம் இன்று வரையும் பணம் கிடைக்கும் கிடைக்கும் என்று சொல்லி மாணவியின் எதிர்காலம் பற்றி சற்று சிந்திக்காது இழுத்தடிப்பு வேலைகளில் சில அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே அன்பான உதவும் உள்ளங்களே இந்த மாணவியின் எதிர்கால வாழ்வை கருத்தில் கொண்டு உங்களால் இயன்ற உதவியை செய்ய முன்வாருங்கள்.இந்த மாணவி கல்வியில் சிறந்த தேர்ச்சி மிக்க மாணவி என்பதோடு, வறுமைக்குடும்ப சூழலில் வாழ்ந்து வரும் ஏழ்மையான சிறுமி என்பதோடு இந்த மாணவியின் எதிர்கால வாழ்க்கையை ஒளிமயமாக்க முன்வாருங்கள்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -