ஒட்டிசுட்டான் கோவிலில் நடந்த தூக்குக்காவடி விபத்தும் அதன் பின்னணியும்..!

சைவ மக்கள் தங்கள் துன்பங்கள், கஸ்டங்கள் தீர்வு வேண்டி ஆலங்களின் மீது சத்தியமிட்டு வேண்டுதல் செய்கின்றனர். இவ் வேண்டுதல்களை பல வடிவங்களில் நிறைவேற்றி நேர்த்திக்கடன்களை முடிக்கின்றார்கள். இது போன்றே நேர்த்தி தூக்குக் காவடி எடுப்பதாக வைத்த ஒருவர் 21.04.2016 அன்று காலை ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தலைவாசலில் காவடியுடன் உளவு இயந்திரப் பெட்டி தடம்புரண்டு பரிதாபகரமாக உயிரிழந்து பெரும் சோகத்தினை ஒட்டிசுட்டான் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது

இதுவரை காலமும் தான்தோன்றீஸ்வரர் கோவிலுக்கு வேறு கோவிலில் இருந்து தான் காவடி எடுப்பார்கள் ஆனால் 21.04.2016 அன்று தான்தோன்றீஸ்வரர் கோவிலில் தொடங்கி மம்மில் ஆலயம் வரை நேர்த்திக்கடனை முடிப்பதற்காக அவ் இளைஞன் தூக்குக் காவடியினை எடுத்தான். 

வன்னி மாவட்டத்தில் ஒட்டிசுட்டானில் தான்தோன்றிஸ்வரராக உள்ள இவ் ஆலயம் ஒரு குடும்ப உறவுகளின் சொந்தக்கோவிலாக மாற்றம் பேற்று. இதன் செயற்பாடுகள் ,அபிவிருத்திகள் ,பூசைகள் நடைபெற்று வருகின்றன. 

இக் கோவில் மணியகாரர் என்பவரும் இவரது குடும்ப உறவினர்களும் முளுமையாக அன்னிய தேசம் சென்று குடியேறியுள்ளமையால் இக் கோவில் இவர்கள் வம்சவளியினர் இப்போதும் நிர்வாக கட்டமைப்பை ஏற்ப்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகின்றனர். 

இவர்களும் வேறு இடத்தில் வாழ்வதால் இக் கோவிலின் செயற்பாடுகளை நேரடியாக இருந்து செயற்படுத்தாமல் காலத்திற்கு ஏற்ற செயற்பாடுகளுடன் நிர்வகித்து வருகின்றனர். இதனால் இக் கோவிலில் பூசைகள் அபிவிருத்திகள், புனரமைப்புகள் திட்டமிடாமல், வரைபுகள் இல்லாமல் இப்போதுள்ள நிர்வாகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது

இக் கோலில் பிரதான சாலைகளோடு அமைந்து இருந்தாலும் கோவிலைச் சூள உள்ள காணிகள், வீடுகள், இக் கோவிலுக்கு சொந்தம் கொண்டாடுகின்றனர். இவர்கள் அண்ணிய நாடு சென்று வாழ்வதால் இக் காணிகளில் மக்கள் வாழததால் பற்ரைகளாக காடுகளாக உள்ளதால் குரங்குகளின் வாழ்விடமாகவே காணப்படுகின்றன.

போர் முடிந்து மக்கள் 2010ம் ஆண்டு குடியமர்வு நடந்ததன் பின்னர் இக் கோவில் மக்களின் வழிபாட்டுக்குட்பட்டு பூசைகள் நடந்து வருகின்றது. 2012ம் ஆண்டு கோவிலின் தீர்த்தக்கேனி புணர்த்தானம் செய்யப்பட்டது. 2015ம் ஆண்டு வேலிகள் கம்பி போட்டு அடைக்கப்பட்டு நான்கு வாசல்களும் விடப்பட்டது இதில் கிழக்கு, வடக்கு, தெற்கு வாசல் என்பன இரும்பு கதவு போடப்பட்டது. 

தென்மேற்கு ( கேற்) இல்லாமல் உள்ளது. இதில் வடக்கு வாசலும் கிழக்கு வாசலும் மக்கள் கோவிலுக்கு சென்று வர பிரதான பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். ஆனால் கோவில் நிர்வாகத்தினர் வடக்கு வாசலால் வாகனம் பயணிக்க வேண்டாம் என வாசலில் வாசகம் இடப்பட்டு கிழக்கு வாசலை பயன்படுத்துமாறு வாசமிட்டுள்ளனர். தற்போதும் காணப்படுகின்றது.

திட்டமிட்டு செய்யப்படாத சரிவுப்பாதையின் காரணமாகவே இக்காவடி வாகனம் தடம்புரண்டு அனர்த்தத்தையும் அந்த இளைஞனின் மரணத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாகனச் சாரதியின் கவனயீனமும் ஒரு காரணமாகவுள்ளது. 

இக்கோவிலில் மக்கள் செல்லும் பாதைகள், பாலங்கள், கிணறுகள், மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் எல்லாவகையான வசதிகளிலும் இக் கோவிலை சார்ந்தவர்கள் பொறுப்பான நடவடிக்கை எடுத்து இனிவரும் காலங்களில் இவ்வாறான துயரச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க ஆவணம் செய்ய வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்

தொகுப்பு – பாஸ்கரன் கதீஷன்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -