ஐரோப்பிய யூனியன் மற்றும் பிறக்டிகல் அக்சன் அனுசரனையில் பீட் ஸ்ரீலங்னா நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டுவரும் 'பன்முகப்படுத்தலை பரவலாக்குதல்' எனும் செயற்திட்டத்தின் அனுபவப் பகிர்வு சம்மந்தமான செயலமர்வு அண்மையில் பொத்துவில் அருகம்பை ரை ஸ்டார் ஹொட்டலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அதிதிகளாக அக்கரைப்பற்று மாநாகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லதீப், பிறக்டிகல் அக்சன் நிறுவனத் திட்ட முகாமையாளர் பிரசாத் ரத்நாயக்க, பீட் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் எஸ்.எம்.ஸாஹிர் ஹூஸைன் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தைப் பற்றி மேலதிக விடயங்கள் மற்றும் வெளிநாடுகளில் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பாக கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் கலாநிதியுமான டீ.திருச்செல்வம் அவர்கள் விரிவுரை நிகழ்த்தினார்
மேலும், இதுவரை காலமும் இத்திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்திய அமைப்புகளுக்கு நினைவுப் பரிசுகளும், கௌரவிப்புக்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் தொடர்ந்து திட்டத்தின் நல்விளைவுகளை தொட்ந்தும் முன்னெடுப்பதற்கான சாதத்தியப்பாடுகள் பற்றி இப்பகிர்வுப்பட்டறை முக்கியத்துவமளித்தமையும் குறிப்பிடத்தக்கது.