கல்லூரியின் முன்னேற்றத்துக்காக ஒருமித்து செயற்படும் கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் மாணவர்கள்..!

யு.கே.காலித்தீன்-
ல்முனை ஸாஹிராக் கல்லூரியின் க.பொ.த உயர்தர தொழில் நுட்ப பிரிவில் கல்வி பயிலும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பொதுப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு நிறைவுறாத பாடத்திட்டங்கள், செயன்முறைகளை பரீட்சைக்கு முன்னராக முழுமையாக நிறைவு செய்வதற்கான முயற்சிகளை கல்லூரியின் பழைய மாணவர்சங்கமும், பாடசாலை அபிவிருத்திக் குழுவும் இணைந்து தற்போது மேற்கொண்டு வருகின்றன.

கல்லூரி அதிபர் பி.எம்.எம். பதுர்தீன் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடாசாலை அபிவிருத்திக் குழுவிடம் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாகவே இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி ஆசிரியர்கள், பகுதித் தலைவர்கள்,மாணவர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் தேவையான வளவாளர்களையும், பயிற்றுவிப்பாளர்களையும்ஏற்பாடு செய்துள்ளதுடன் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக பழைய மாணவர்சங்க செயலாளர் பொறியியலாளர் கமால் நிசாத் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் நிலஅளவையாளர் எம்.ஏ.றபீக் பழைய மாணவர் ஆகியோர் தெரிவுத்துள்ளனர்.

தென் கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளர் பொறியியலாளர் .ஏ.எம்.அஸ்லம் சஜா இச்செயற்திட்ட ஆலோசகராக செயற்பட்டு வருவதுடன் தேவையான பங்களிப்புக்களை வழங்கியும் வருகின்றார்.

இவர் பழைய மாணவர் சங்க செயலாளராக கடமையாற்றிய காலத்தில் இருந்து கல்லூரியின் உயர்தர பிரிவின் பெறுபேறுகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருவதுடன் அதன் முன்னேற்றத்துக்கான செயத்திட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இச்செயற்திட்டத்துக்கான பங்களிப்புகளை இக்கல்லூரில் கல்வி பயின்று இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள பல்கலைக்கழகங்களிலுள்ள மாணவர்களும், தொழில் பயிற்சி நிறுவன அதிகாரிகளும் வழங்கிவருவதுடன் பாடசாலை நேரத்திலும், மேலதிகமாக மாலை நேரங்களிலும் பாடங்களும், செயன்முறைகளும் மிகசிறப்பாக நடைபெற்று வருகின்றன.

ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள எழுத்துப் பரீட்சையில் 75 வீதமான புள்ளிகளும் செயன்முறை பயிற்சிகளுக்கு 25 வீதமான புள்ளிகளும் வழங்கப்படவுள்ளன.

இதற்கான முழுமையான ஒத்துழைப்புகளை கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் , இணைப்பாட விதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் ஏ.பி.எம்.முஜீன் , உதவி அதிபர் எம்.எம்.எம்.நிஸார்தீன் மற்றும் பகுதி தலைவர் ஏ.ஆதம்பாவா ஆகியோர் வழங்கி வருகின்றனர்.

2015 ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக இடம்பெற்ற பொதுப்பரீட்சையில் இக்கல்லூரி மாணவர்கள் பொறியியல் தொழில் நுட்பப்பிரிவிலும், உயிரியல் தொழில்நுட்ப பிரிவிலும் அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலை பெற்று வரலாற்று சாதனை படைத்திருந்தமை எம் அனைவருக்கும் மகிழ்ச்சியினை தருகின்றது. 

அத்துடன் மூன்று மாடிகளுடன் சகல வசதிகளும் கொண்ட உயர்தர தொழில்நுட்ப பீடம் கல்முனைத் தொகுதியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் மட்டுமே அமைந்துள்ளது. தொழில்நுட்ப பீடத்தில் கணிசமான எண்ணிக்கையில் தமிழ் மாணவர்களும் இணைந்து இக்கல்லூரியில் கல்வி கற்கின்றார்கள்.

சகல தரப்பினரும் இணைந்து கல்லூரியின் முன்னேற்றத்துக்காக ஒருமித்து செயற்படுகின்றமை உண்மையில் பாராட்டப்படக்கூடிய விடயமாகும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -