கரீம் ஏ.மிஸ்காத்-
கிழக்கு மாகாணத்தில் இவ்வாண்டுக்கான இடமாற்றக் கடிதங்கள் ஆசிரியர்களுக்கு கிடைக்கப் பெற்று வருகின்றது. இடமாற்றம் கிடைக்கப் பெற்றவர்கள் 25முதல் புதிய சேவை நிலையத்தில் கடமையேற்க வேண்டும்.
இடமாற்றத்தில் அதிருப்தியுள்ளவர்கள் 06ஆம் திகதிக்கு முன்னர் மேன் முறையீடுசெய்யவேண்டும்.
அவ்வாறு மேன்முறையீடு செய்பவர்கள், அந்த மேன்முறையீட்டின் பிரதியொன்றயும், மேன் முறையீட்டுக்கு ஆதாரமாக இணைக்கப்படும் ஆவணங்களின் பிரதிகளையும், இஸ்லாமிய ஆசிரியர் தொழிற் சங்கத்திற்கும் அனுப்பிவைக்குமாறும் கேட்கப்படுகின்றீர்.
அனுப்பவேண்டிய முகவரி:
பொதுச் செயலாளர்,
இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்,
பழைய தபாலக வீதி,
பொத்துவில்-15.