தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலாச்சார சீர்கேடுகள் விழிப்புணர்வு மாநாடு..!

S.சஜீத்-
தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் (29.04.2016) வெள்ளிக்கிழமை இன்று காத்தான்குடி குட்வின் சதுக்கத்தில் இடம்பெற்ற கலாச்சார சீர்கேடுகள் விழிப்புணர்வு மாநாடு மௌலவி MCM. சைனி (உமரீ) அவர்களால் இஸ்லாமிய பெண்களின் ஆடைகள் எனும் தலைப்பினிலும் மற்றும் மௌலவி MCM. ஸஹ்றான் (மஸ்ஊதீ) அவர்களால்வெட்கத்தைத் தொலைத்துவரும் முஸ்லிம் சமூகம் ஆகிய தலைப்புக்களில் ஆலிம்களால் மார்க்கவுரை நிகழ்த்தப்பட்டன.

மேலும் இம்மாநாட்டின் போது பல விடயங்கள் தொடர்பாகவும் முஸ்லிம் சமுதாயத்தினர்களுக்கு தெளிவூட்டினர். அதாவது

இஸ்லாம் கூறும் ஆடை ஒழுக்கங்கள் என்ன?

இஸ்லாத்தின் பார்வையில் இன்றைய சொக்ஸ் அபாயா' செக்ஸ் அபாயாவா?

அபாயா அணிவதில் நமது பெண்கள் விடும் ஏழு வகையான தவறுகள் என்ன?

ஆண் பெண் ஒன்றாகச் சேர்ந்து படிக்கும் கோ எடிவ்கேஷனை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

கற்பைத் தொலைத்து கல்வியைத் தேடும் மேலைத்தேய கலாசாரத்தின் பிரதிபலிப்புக்கள் என்ன?

அந்நிய பிரதேசங்களில் பிரேத்தியேக வகுப்புக்களால் முஸ்லிம் சமூகம் சந்திக்கும் அவலங்கள் என்ன?

வேலைக்குச் செல்லும் பெண்கள் குறித்து இஸ்லாமியப் பார்வை என்ன?

நாவக்குடா இசை நடனக் கல்லூரியில் முஸ்லிம் பெண்களுக்கு நடப்பெதென்ன?

கள்ளக் காதலுக்கு தொலை பேசியின் பங்களிப்பு எத்தகையது?

பெண்களை சீரழிக்கும் கயவர்கள் கையாளும் யுக்திகள் என்ன?

பிரதி சனி ஞாயிறுகளில் நாவலடி சவ்குக் காட்டுக்குள் நடக்கும் சமூகச் சீரழிவுகளை முஸ்லிம் பெற்றோர்கள் அறிவார்களா?

ஏன் முஸ்லிம் பெண்கள் ஊடகங்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?

இந்நாட்டில் ஷர்மிலா செய்யித், ரம்ஸினா ஜப்பார் போன்ற மானங்கெட்ட பெண்ணிலைவாதிகள் எப்படி உருவாகிறார்கள்?

வெட்கங்கெட்ட புருஷனுக்கு இஸ்லாம் சொல்லும் விஷேட எச்சரிக்கையென்ன?

விபச்சாரத்திற்கு அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கும் கொடூர தண்டனை என்ன?

போன்ற விடயங்கள், தேவைக்கேற்ப வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் எடுத்துக் காட்டப்பட்டு குர்ஆன் ஹதீஸ் ஒளியின் மூலம் தெளிவூட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் குறிப்பிடுகையில் அண்மைக்காலமாக சிறிது சிறிதாக வெட்கத்தை இழந்து வரும் முஸ்லிம் சமுதாயத்தின் கலாசாரத்தையும் கட்டுக்கோப்பையும் கட்டியெழுப்பும் இம்மாநாட்டிற்கு பெருந்திரலான ஆண், பெண் இருபாலாரும் கலந்து கொண்டன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -