மனித நேயமிக்க மனிதர் மர்ஹூம் எம்.எச்.முஹம்மத் - மாகாண சபை உறுப்பினர் ஜவாத்

எம்.எஸ்.எம்.சாஹிர்-
மூத்த முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான அல்-ஹாஜ் எம்.எச். முஹம்மத் அவர்களின் மறைவு முஸ்லிம் சமூகத்துக்கு பேரிழப்பாகும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.றஸ்ஸாக் (ஜவாத்) விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

நேர்மையும் கண்ணியமும், மனிதாபிமான உணர்வும் முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்தின் மீது அடங்காப் பற்றும் கொண்ட மர்ஹும் முஹம்மத் அவர்கள் தனது நீண்ட கால அரசியல் பயணத்தில் எல்லா வகையான பதவிகளையும் பெற்று சமூகப்பணியாற்றியுள்ளார்.

மேயராக, அமைச்சராக, அரசியல் அரங்கின் மூன்றாவது முக்கிய பதவியான சபாநாயகர் பதவியை வகித்து, தனது ஆளுமையை நிரூபித்துள்ளார்.

மர்ஹூம் எம்.எச்.முஹம்மத் அவர்களிடம் யாராவது உதவி நாடி ஏதாவது கேட்டால் வந்தவர் எந்த சாதி, மதம், எந்த கட்சி என்று பார்க்காது உதவி செய்யக் கூடிய நல்லுள்ளம் கொண்ட ஒரு மனிதர். வெளிநாடுகளோடு நட்புறவு வைத்து பள்ளிவாசல் மத்ரஸாவுக்கு நிறைய பண உதவிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பொரளைத் தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றி வாகை சூடி வந்துள்ளமை ஒன்றே இவருக்கு பெரும்பான்மை மத்தியில் இருக்கும் செல்வாக்கைக் கோடிட்டுக் காட்டுகிறது.
அன்னாருக்கு ஜென்னத்துல் பிர்தௌஸ் கிடைக்க இறைவனைப் பிரார்த்திப்போமாக! 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -