நீங்கள் பிரதி அமைச்சர் பதவியை கட்சிக்குத் தெரியாமல் இராஜினாமா செய்த போதும், கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம். என்று மேடை போட்டு கடந்த மாகாண சபைத் தேர்தலில் கூறிய போதும், மீண்டும் கட்சிக்குத் தெரியாமல் களவில் போய் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சை எடுத்த போதும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் தீர்மானத்திற்கு வேலை செய்யாமல் திரைமறைவில் மகிந்தவுக்கு வேலை செய்த போதும், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சியின் வேட்பாளர்களை தோற்கடிக்க முயற்சி செய்த போதும்,
ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு கட்சியிலிருந்து உங்களை இடைநிறுத்தவோ அல்லது நீக்கவோ முயற்சிக்காதது கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்தின் மிகுந்த இழிநிலையைத்தான் காட்டுகிறது.
கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லாமையைத்தான் காட்டுகிறது.
உங்களுக்கு மீண்டும் மீண்டும் தேசியப்பட்டியல் வழங்கப்பட்டமையை கேள்விக்குட்படுத்தாமையும் உட்கட்சி ஜனநாயகத்தின் இழிநிலையைத்தான் காட்டுகிறது.
இந்த முறையும் உங்களுக்குத் தேசியப்பட்டியல் தரப்பட்டிருப்பின் அப்போது உட்கட்சி ஜனநாயகம் உயர்ந்து நின்றிருக்கும். அப்போது உங்களுக்கு றஊப் ஹக்கீம் முற்போக்குள்ள ஒருவராக தென்பட்டிருப்பார்.
உயர்பீடக் கூட்டமொன்றில் இம்போர்ட் மிர்ரர் செய்தி இணையத்தளத்தில் உங்களுக்கு எதிராக வந்திருந்த செய்தியை பார்த்துவிட்டு, அவ்வுயர்பீடக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது போட்டோ (அடையாளப் படத்தை பார்த்து) எடுத்துப் போட்டிருக்கிறார்கள் எனக்கூறி கோபப்பட்டு கிழம்பியடித்தது நினைவிருக்கா?
அப்போது மட்டும் எங்கு போனது உங்கள் தகவலறியும் உரிமை பற்றிய கவலை? அப்போது மட்டும் எங்கு போனது உங்கள் முற்போக்குத்தனம்?
நீங்கள் நாக்குப் புரட்ட ஆரம்பித்தால், அந்த நாக்கின் ஒவ்வொரு அசைவையும் அளந்து பார்க்க ஆயிரம் பேர் உருவாகி விட்டார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.