நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இளம் அரசியல்வாதி ஒருவரை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஹிக்கடுவையில் இடம்பெற்ற திருமண விருந்து ஒன்றின்போதே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணியின் உறுப்பினர் திஸார குணசிங்கவுக்கே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
திஸார குணசிங்க, காலஞ்சென்ற அரசியல்வாதி நந்த குணசிங்கவின் மகனாவார். இந்தநிலையில் திஸார, நடைமுறை அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதாக குறிப்பிட்ட நாமல் தாம் மீண்டும் ஆட்சியமைக்கும் போது தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்களை தண்டிக்கப் போவதாக எச்சரித்துள்ளார்.