தென்னிந்திய இசைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இலங்கை இசை நிகழ்ச்சி அனாச்சாரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 23ம் திகதி காலி முகத்திடல் மைதானத்தில் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி இந்த மாதம் நடத்தப்படவிருந்தது.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த தரப்பிடமிருந்து ஏற்பாடுகளை மற்றுமொரு தரப்பு பறித்துக்கொள்ள முயற்சித்துள்ளது.
இந்த இரண்டு தரப்புமே நல்லாட்சி அரசாங்கத்தை வெற்றியீட்டச் செய்த வர்த்தகத்தரப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று லட்சம் பேர் இந்த நிகழ்ச்சியை பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.