ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரதான பதவிகள் எதனையும் தான் பொறுப்பேற்கப் போவதில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவருக்கு கட்சியில் பிரதான பதவியொன்று வழங்குவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறித்து அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக கோட்டாபயவை பெயரிட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டதாக அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
எது எப்படிப்போனாலும், பதவிகளை கட்சியில் கேட்டு வாங்கி பெற்றுக் கொள்வதற்கோ, இதுபோன்ற நிலையில் ஸ்ரீ ல.சு.க.யில் பிரதான பதவியொன்று கிடைக்கப்பெற்றாலும் அதனை பொறுப்பேற்பதற்கோ தான் தயாரில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.