மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கிடைத்த அதிஷ்டம்..!

மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தை வீழ்த்தி 2–வது முறையாக 20 ஓவர் உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது.

கிண்ணத்தை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டது. 2–வது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசாக கிடைத்துள்ளது.

அரை இறுதியில் தோல்வியை தழுவிய இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு தலா 4 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

2014–ம் ஆண்டு உலக கிண்ணத்தில் வழங்கப்பட்ட பரிசு தொகையில் இருந்து இது 80 சதவீதம் கூடுதலாகும்.

இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை செமுவேல்ஸ் பெற்றார். 273 ஓட்டங்கள் குவித்த விராட் கோலி தொடர் நாயகன் விருதை பெற்றார்.

இந்நிலையில் இப்பணத்தை வீரர்களிடையே பகிர மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மூலம் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் சபை இடையேயான மோதல் நிலை முடிவுக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

நேற்றைய போட்டியின் பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவர் , தமது கிரிக்கெட் சபை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தமையும் அது சர்ச்சையில் முடிவடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -