பிரபல நடிகர் அஜீத்குமாரை ‘அமராவதி’ என்ற வெற்றிப்படத்தினூடாக தமிழில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் செல்வா. ‘தலைவாசல்,’ ‘கர்ணா’, ‘ஆசையில் ஒரு கடிதம்’, ‘ஜேம்ஸ்பாண்டு’, ‘பூவேலி’, ரோஜாவனம், நான் அவனில்லை போன்ற வெற்றிப்படங்களை அவர் இயக்கியுள்ளார். அவர் இயக்கும் 26 படத்துக்கு ‘தொப்புள்கொடி’ என்று பெயரிட்டுள்ளனர்.
‘அதிபர்’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் T.சிவகுமாரின் பென் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவிய இந்த படத்தின் கதையை தயாரிப்பாளர் T.சிவகுமாரே எழுதி இருக்கிறார். ‘அதிபர்’ படத்தின் கதை இவரின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம் ஆகும்.
இந்தப்படத்துக்கு அதிபர் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார். இவர் சிறந்த இசைப்பின்ணணியை கொண்டவர். பல முன்ணணி இசையமைப்பாளர்களோடு பணிபுரிந்துள்ளார்.
படத்தில் ஐந்துபாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். இலங்கை கவிஞர் அஸ்மின் இப்படத்தில் மூன்று பாடல்களை எழுதியுள்ளார்.
விஜய் ஆண்டனியின் ‘நான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தப்பெல்லாம் தப்பேயில்லை’ பாடலினூடக பாடலாசிரியராக அறிமுகமாகி ஜிப்ரான், ஸ்ரீகாந்த்தேவா போன்ற முன்ணி இசையமைப்பாளர்கள் பலரோடு பணிபுரிந்திருக்கும் அஸ்மின் சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியருக்கான ‘எடிசன்’ விருது பெற்றவர். இப்படத்தில் இவர் எழுதியுள்ள ஒரு பாடலில் இசையமைப்பாளர் D.இமான் இசையமைப்பாளராக தோன்றி நடிக்கவுள்ளார்.
ஈழத்தமிழர்களின் வலியை கூறும் இவர் எழுதிய மற்றுமொரு பாடல் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தில் வைரமுத்து எழுதியுள்ள ‘விடைகொடு எங்கள் நாடே’ பாடல்போல் உலக தமிழர்களிடையே மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தும் பாடலாக உருவாகியுள்ளதென இயக்குனர் கருத்து வெளியிட்டுள்ளார். இப்பாடலை தேவா, முகேஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
இப்படத்தில் நான்கு முன்னணி நாயகர்கள் நடிக்க இருகிறார்கள், நாயகிகள் மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் நாயகிகளில் ஒருவராக நடிப்பதற்கு இலங்கை நடிகை ஒருவருக்கு வாய்ப்பளிப்பதாக இயக்குனர் செல்வா அறிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் ginosl2013@gmail.com என்ற மின்னஞ்சலினூடாக உங்கள் புகைப்படங்கள், விபரங்களை அனுப்பிவையுங்கள். மேலதிக விபரங்களுக்கு 0777586888 (ராஜா) என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளுங்கள்.