இலங்கை பாராளுமன்றத்தில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பொது எதிரணியினர் ஜெனிவாவில் போராட்டம் ஒன்றை நேற்று நடத்தினர். இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, உதயகம்மன்பில, பந்துல குணவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
நாட்டின் படைவீரர்களை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் பொது எதிரணியால் ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறிப்பாக எதிர்க் கட்சித் தலைவர் பதவியையும், எதிர்க் கட்சி அந்தஸ்தையும் தமக்கு வழங்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி அரசாங்கம் தமக்கு அநீதி இழைத்துவிட்டதாக அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் குறைந்தளவான மக்கள் கலந்து கொண்டமை குறுப்பிடத்தக்கது.