பள்ளிவாசல் வளாகத்தில் புகைப்பதைக் தட்டிக் கேட்ட மாணவனுக்கு நேர்ந்த கொடுமை..!

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி – தனங்கிளப்பு பிரதேசத்தில் கத்திக்குத்துக்கு இலாக்காகிய பாடசாலை மாணவன் உள்ளிட்ட சகோதரர்கள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் திங்கட்கிழமை (25) 7 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி – தனங்கிளப்பு வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் வளாகத்தில் இளைஞர் குழு ஒன்று சிகரெட் புகைத்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

அதனைக் கண்ணுற்ற குறித்த பாடசாலை மாணவன் அதனைத் தவறு என்று தட்டிக்கேட்டுள்ள நிலையில், ஆத்திரமடைந்த குழுவினர் குறித்த மாணவனையும் அவரது சகோதரனையும் கடுமையாகத் தாக்கியதோடு, கத்தியால் குத்தி இருவருக்கும் காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

இருவரது தலையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -