ஹைதர் அலி-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் வீதிக்கு ஒருநாள் என்ற தொனிபொருளில் தொடங்கியுள்ள மக்கள் இல்லம் நாடிச்சென்று அவர்களின் குறைகளை கேட்டறிகின்ற நடமாடும் சேவையின் ஓர் அங்கமாக புதிய காத்தான்குடி றிஸ்வி நகரைச் சேர்ந்த இரண்டு மீன் வியாபாரிகளுக்கு தமது தொழிலினை விருத்தி செய்வற்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார்.
மாகாண சபையின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டிலிருந்து வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் மீன் வியாபாரத்தினை மேற்கொண்டு அவர்களது வாழ்வினை வளம் பெறச்செய்வற்காக இரு மீன் வியாபாரிகளுக்கும் ரூபா. 40,000- பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள், தராசுகள், மற்றும் கத்திகள் என்பன அவர்களின் இல்லம் நாடிசென்று மாகாண சபை உறுப்பினரினால் அன்மையில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது அப்பிரதேச மக்களுடன் மகிழ்ச்சியாக கலந்துயைாடல்களை மேற்கொண்டு, அவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் தேவைகளை கேட்டறிந்ததுடன் பெரியவர்கள் மற்றும் சின்னஞ் சிறார்களுடனும் ஐஸ்கிரிம் வழங்கி தானும் உண்டு மகிழ்ந்தார்.