அஷ்ரப். ஏ சமத்-
ஜோன்புர - இளைஞா் சேவை மன்றத்தில் உள்ள இளைஞா் படையணிக்கு நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலாளா் பிரிவிலும் 25 வீடுகளைக் கொண்ட ஜோன்புர வீடமைப்புத் திட்டம் (இளைஞா்களுக்கான வீடமைப்பு கிராமம்) நாடு முழுவதிலும் ஆரம்பிக்கப்பட உள்ளது. முதலாவது இளைஞா் வீடமைப்புக் கிராமம் ஏப்ரல் 2ஆம் திகதி தம்புல்லையில் றன்துருகமவில் ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. 35 வயதுக்குட்பட்ட வீடற்ற இளைஞா்களுக்கு 10 பேர்ச் காணி இலவசமாக வழங்கப்பட்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வீடமைப்புக் கடன் வழங்கப்பட்டு 25 வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளது. என அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்.
மேற்படி வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக 31/03/2016 அன்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடக மாநட்டிலேயே வீடமைப்ப நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்.
அவா் மேலும் அங்கு தகவல் தருகையில் -
பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கீழ் உள்ள இளைஞா் அமைப்பின் யோன்புர தற்பொழுது தம்புல்லை சீகிரிய பகுதியில் நடைபெற்று வருகின்றது. அதனை முன்னிட்டு அவரின் ஆலோசனைக்கிணங்க நாடு முழுவதிலும் உள்ள 330 பிரதேச செயலாளா் பிரிவிலும் 330 ஜோன்புர வீடமைப்புத்திட்டம் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படும். இதற்காக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை 2 இலட்சம்ருபா வீடமைப்புக் கடனையும் வழங்கும். எனத் தெரிவித்தாா்
இவ் வைபவத்தின்போது - வீடு இல்லாமல் பாதைஓரத்தில் வாழும் அநுராத புரத்தினைச் சோ்ந்த ஒரு குடும்பத்திற்கு 5 இலட்சம் ருபா செலவில் வீடொன்றை நிர்மாணிக்கவென அவருக்கான காசோலையையும் அமைச்சா் வழங்கி வைத்தாா். இவ் வீடு ஒரு மாத்த்திற்குள் நிர்மாணிக்கும் படி அநுராதபுர வீடமைப்பு முகாமையாளருக்கும் அறிவுரை வழங்கினாா்.