சம்பூர் அனல் மின்சாரத் திட்டமும், நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் முன்னெடுப்புக்களும்..!

ம்பூர் பிரதேச மக்கள் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து வாழ்ந்த காலகட்டத்தில்இம்மக்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு இடம் அளிக்காது மக்களையும்சூழலையும் பாதிக்கின்ற அனல் மின்சார திட்டமானது மேற்கொள்வதற்குமுயற்சி எடுக்கப்பட்டதை நாம் நன்கு அறிவோம்.

நல்லாட்சியையும், ஆட்சி மாற்றத்தையும் விரும்பிய 85% வீதமானமூதூர்த்தொகுதி மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கௌரவ ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வாக்களித்தார்கள். சூழலை மிகவும்நேசிக்கின்ற, மக்களுடைய உனர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கின்ற அரசியல்தலைவர் என்ற வகையில் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்ததிட்டம் நல்லாட்சி அரசாங்கத்தை தலைமைதாங்கும் இந்த ஜனாதிபதியால்கைவிடப்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்.

இப்பிரதேச மக்களின் விருப்புக்கும் வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தலாகஅமையப்போகும் இந்த திட்டத்தினை உடனடியாக கைவிடுமாறு புதியஅரசாங்கத்தை வற்புறுத்தும் நோக்கில் மூதூரில் மிக முக்கியமான மக்கள்தொண்டு நிறுவனங்களில் ஒன்றான மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் (PDF)நிறுவனத்தின் வழிகாட்டலின் கீழ் மூதூரில் பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்துமக்களின் கையொப்பத்தை பெறும் போராட்டத்தினை முன்னெடுத்ததைநாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.

கடந்த காலங்களில் திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர் நோக்கியபல்வேறு பிரச்சினைகளையும் ஆழமாக ஆராய்ந்து அவற்றினை வெளி உலகத்திற்கு கொண்டு வருவதற்கு பெறும் பங்காற்றிய Peace Home அமைப்பின்ஏற்பாட்டில் மூதூரின் பொறுப்பு வாய்ந்த சிவில் அமைப்புக்களின் கூட்டுமுயற்சியால் மூதூர் பசுமைக் குழு (Muthur Green Committee) என்ற மக்கள்அமைப்பானது உருவாக்கப்பட்டு இவ்விடயம் தொடர்பாக பல ஆரோக்கியமானமுன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதை நாங்கள் பாராட்டுகின்றோம்.

இப்பிரதேச மக்களும் மற்றும் சிவில் அமைப்புக்களும் விழிப்புணர்வுடன்பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் எமது அரசியல் தலைமைகளும்மக்கள் பிரதி நிதிகளும் இவ்விடயம் தொடர்பாக ஒரு அசமந்தப் போக்கைகடைப்பிடிப்பது மிகவும் கவலையான விடயமாகும்.

சமூகப் பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி என்ற வகையில் நல்லாட்சிக்கானதேசிய முன்னனி மக்களின் இந்த முயற்சிகளுக்கு பங்களிப்பு செய்யும்வகையில் இந்த விடயத்தை மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின்கவனத்திற்கு கொண்டு வந்தது. 

இந்த முயற்சியின் முதல் கட்டமாக மூதூர்பிரதேச மக்களின் கையொப்பம் மற்றும் சிவில் அமைப்புக்களின்கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் ஒன்றை ஜனாதிபதியின் தனிப்பட்டசெயலாளர் திரு. ANK. அமரதுங்க அவர்களிடம் 2016.04.08ஆந்திகதி ஜனாதிபதிசெயலகத்தில் யைளித்தோம். இந்த விடயத்தை கௌரவ ஜனாதிபதிஅவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருதற்கு முயற்சிப்பதாக அவர்எங்களிடம் உறுதியளித்தார்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் இந்த முயற்சிகள்தோல்விகானும் பட்சத்தில் ஏனைய தரப்புக்களின் ஒத்துழைப்போடுசட்டநடவடிக்கை போன்ற அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி நாங்கள்பரிசீலித்து வருகின்றோம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -