எம்.வை.அமீர்-
எதிர்வரும் 2016-04-26 ஆம் திகதி இடம்பெறவுள்ள கிழக்குமாகாணசபை அமர்வில், கிழக்குமாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரீப் சம்சுடீனினால் சாய்ந்தமருது தொடர்பில் இரு வேறு பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
அதில் கடந்த 2012 ஆம் ஆண்டு, கிழக்குமாகாணசபையில் அப்போது சுகாதார அமைச்சராக kசுபைர் முஹம்மட் சரீபினால் கொண்டுவரப்பட்ட சாய்ந்தமருது, நிந்தவூர் மற்றும் புல்மோட்டை போன்ற பிரதேச வைத்தியசாலைகளை, தளவைத்தியசாலைகளாக தமுயர்த்துவது தொடர்பான பிரேரணை சபையில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் நிந்தவூர் மற்றும் புல்மோட்டை வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில், சாய்ந்தமருது வைத்தியசாலை தரமுயர்த்தப்படாது பாரபட்சமான முறையில் விடப்பட்டுள்ளதாகவும், குறித்த சாய்ந்தமருது வைத்தியசாலையை உடன் தளவைத்தியசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
அதேவேளை 2004 ஆம் ஆண்டு இலங்கை உட்பட அண்டியுள்ள நாடுகளை கதிகலங்கவைத்த சுனாமி கடற்பேரலையின் காரணமாக, ஆயிரக்கணக்கில் உயிர்களையும், உடமைகளையும் இழந்து தவிக்கும் சாய்ந்தமருது மக்களுக்கு வோலிவோரியன் கிராமத்தில் வழங்கப்பட்டுள்ள, வீட்டுத்திட்ட வீடுகளுக்கு அஸ்பெஸ்டெஸ் சீட்டினால் கூரை இடப்பட்டுள்ளது.
குறித்த வீடுகளில் வசிக்கும் மக்கள் அதிக உஸ்ணத்தின் காரணமாக மிகவும் அவதியுறுகின்றனர். வேதனையுடன் வாழும் இம்மக்களின் வீடுகளுக்கு உஸ்ணத்தை குறைக்கக்கூடிய வகையில் வேண்டிய திருத்த வேலைகளை செய்து வழங்க கிழக்குமாகாணசபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்தார்.