உண்மையினை சமூகத்திற்கு தெளிவுபடுத்துவதற்கு முனைகின்றோம்: சலாம் ஆசிரியர் மாணவர் சமூகம் பதில்


ஆசிரியர் ரஷாக் மற்றும் பாடசாலை சமூகத்திற்கு ILA. சலாம் ஆசிரியர் விடுக்கும் வேண்டுகோள்: 
எனது மறுப்பறிக்கைக்கு எதிராக தாங்களால் வெளியிடப்பட்ட விளக்க அறிக்கைக்கு அமைய, 
குறித்த அறிக்கையில் நீங்கள் குறிப்பிட்டது போன்று தங்களின் பொய்யான பிரசினங்களை பகிரங்கமாக உங்கள் முன்பும் பாடசாலை சமூகம் முன்பும் மாணவ சமுதாயம் முன்பும் மிகப்பகிரங்கமாக தீர்த்து வைக்க நான் தயாராக உள்ளேன். 
ஆகவே வெறுமனே அறிக்கை விட்டு அடுத்தவர்களை அளந்து விடாமல் முடிவெடுக்கும் நாளை நோக்கி நகரும் படி கேட்டுக்கொள்கிறேன்
காலம் சிறியது போதிக்க வேண்டியவை நிறைய உள்ளன"எனக்கு 
உங்கள் அழைப்பை எதிர்பார்க்கிறேன் முடிவெடுக்க -  
இணைப்பு 4

மதிப்பிற்குரிய 32 வருட கணக்கியல் அனுபவமும் பரீட்சை வினாத்தாள் திருத்துவதில் 30 வருட அனுபவமும் வலய மட்ட மேற்பார்வை குழுவில் 10 வருட காலமும் கொண்ட நிந்தவூர் அல்- அஷ்ரக் ஆசிரியர் அல்ஹாஜ் றசாக் (பவுஸ்) ஆசிரியர் அவர்களே! ஏனைய கண்ணியவாங்களே!

நாங்கள் முதலில் உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புவது இந்த குழப்பம் ஊயர்தர மாணவர்களுக்கு நடைபெற்ற 2ம் தவணைப் பரீட்சை வினாத்தாள் வெளியானதா? இல்லையா? இது மோசடி விவகாரரமா? இல்லையா? என்பது தொடர்பானதாகும். 

ஆனால் திரு. றசாக் ஆசிரியர் கடந்த 04.04.2016 அன்று நீங்கள் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தவிர்த்து ஏனைய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் பேசியுள்ளார் மேலும் கூறப்போனால் வசைபாடியுமுள்ளார். இதற்கு காரணம் என்ன? திரு. சலாம் ஆசிரியர் மீது திரு. றசாக் ஆசிரியர் கொண்ட தனிப்பட்ட விரோதமா? அல்லது அவரின் வளர்ச்சி, அவர்களின் மாணவர்களின் நன்னடத்தை, மாணவர்கள் அவர் மீது கொண்ட விசுவாசம், அவர்களின் கல்வி வளர்ச்சி மீது கொண்ட பொறாமையா? அல்லது தற்கீர்த்திற்காகவா?

மதிப்பிற்குரிய திரு.  சலாம் ஆசிரியர் அவர்கள் அந்த குழப்பம் தொடர்பில் கடந்த 02.04.2016 அன்றைய அறிக்கையில் அந்த குழப்பம் தொடர்பில் மிகவும் ஆதாரமான வகையில் உண்மை நிலவரத்தை தெளிவுபடுத்தியிருந்தார் என்பது நமது சமூகம் அறிந்த வெளிப்படையாக்கப்பட்ட உண்மை நிலவரமாகும்.

கண்ணியத்துக்குரியவர்களே! 01.04.2016ல் பாடசாலை வரலாற்றிலேயே 2வது தடவையாக நடாத்தப்பட்ட பரீட்சை வினாத்தாள் ஆனது 'என்னால் ஏற்கனவே பார்வையிடப்பட்டதே' என்று திரு. றசாக் ஆசிரியர் அவர்களால் மாணவர்கள் இடையே தனது ஆதிக்கத்தை மேலோங்க வைக்கும் வகையில் குறிப்பிடப்பட்டது. மேலும் இது தொடர்பில் ஆதாரமாக மாணவர்களை முன்னிறுத்த முடியும். 

மேலும் அக்கரைப்பற்றிலிருந்து நிந்தவூர் தேசிய பாடசலைக்கு இப்பரீட்சை வினாத்தாள் கொண்டு வருவதாயின் குறைந்தது இரண்டு மணித்தியாலம் தேவைப்படும் (அதாவது பரீட்சை வினாத்தாளினை பிரதி செய்தல், வினாத்தாளினை உரிய இடத்திற்கு கொண்டு வருதல், இன்னும் பிற).

நிலவரம் இப்படியிருக்க இவ்வினாத்தாள் வெளியாகவில்லை என்று நீங்கள் கூற முனைவது சற்று வேடிக்கையாகவுள்ளது. ஆகவே நீங்கள் மோசடிகாரர் என்று எங்களால் உறுதிப்படுத்த இதுவே போதுமானதாகும். இது தொடர்பில் முடிவினை எடுப்பதற்கு நாங்கள் பொதுவான நபர்களிடமே இந்த விடயத்தை பொறுப்பளிக்கின்றோம்.

வினாக்களை தொகுப்பதில் வரட்சி நிலை காணப்படுவதாகவும், மாணவர்களின் தேடுதலுக்கு முரண்படும் வகையில் முட்டுக்கட்டையாக திரு. சலாம் ஆசிரியர் அவர்களே காணப்படுகின்றார் என்றும் குறிப்பிட்டிருந்தீர். நாங்களும் எங்களை போன்ற பழைய மாணவர்களும் இந்த குற்றச்சாட்டுக்கு விடையளிக்க கடமைப்பட்டுள்ளோம். மதிப்பிற்குரிய கனவான்களே! 

மாணவர்களின் தேடலுக்காக, தேடுதலை வளப்படுத்தி உரிய முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக துறை சார்ந்த பேராசிரியர்களின் (03 பாடங்களுக்கும்) உதவிகள், இலங்கை ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவுத்தேடல் சஞ்சிகை, இலங்கையின் கல்வி முன்னோடிகளின் தொடர்புகள் மூலமான நேரடி கருத்துத்தரங்குகள் மூலமாக ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட அக்கறை காட்டி மேலதிக அறிவுக்கு வழிகாட்டி அதற்கான மார்க்கங்களையும் ஏற்படுத்தி தந்து எங்களை சிறந்த ஒர மாணவராக உருவாக்குவதில் அக்கறை காட்டியது திரு. சலாம் ஆசிரியரும் அவரின் கல்வி நிறுவனமுமா? 

அல்லது திரு.றசாக் ஆசிரியரா? அல்லது அவரினை சார்ந்தவர்களா? என்பது தொடர்பில் ஒரு சுய கேள்வியினை திரு றசாக் ஆசிரியரே கேட்டு அதற்கு பதிலையும் தெரிந்து கொள்ள அவர் கடமையானவர் என்பதை அனைவரினது ஞாபகத்திற்கும் கொண்டு வர நினைக்கின்றோம். 

அது மட்டுமல்லாது 'ஏன் இரண்டாவது தடவையாக பரீட்சை எழுத வேண்டும்' என்ற ஒரே கேள்வியினை ஒரு மாணவி எழுப்பியதற்கு அம்மாணவியின் நியாயத்தன்மைக்கும் தைரியத்திற்கும் கிடைத்த பதில் தகாத வார்த்தைகளை (தூசின வார்த்தைகள்) கொண்டு மனம் நோகடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி அம்மாணவி தொலைவில் இருந்து கல்வி கற்கும் ஆசையில் பாடசாலை வந்தவர் என்பதை மறந்து அம்மாணவி மொத்தமாக பாடசாலையில் இருந்து வெளியாக்கப்பட்டமை ஆகும். 

இது எந்த தர நடவடிக்கை என்பதை சமூகமே முடிவு செய்து கொள்ளட்டும். மதிப்பிற்குரிய திரு. றசாக் ஆசிரியர் அவர்களே இதற்கு சட்ட ரீதியில் என்ன தண்டனை என்று நீங்கள் நன்றே அறிவீர்கள். அதனை எங்களால் உங்களுக்கு பெற்றுத்தரவும் முடியும் என ஆணித்தரமாக கூறுகின்றோம். நிச்சயமாக அல்லாஹ்வையும் பயந்து கொள்ளுங்கள்.

நீங்கள் வணிகத்துறையில் கல்வி கற்று பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் அல்ல மேலும் கலைத்துறை தொடர்பில் அதிக அனுபவம் வாய்ந்த ஆசிரிர் என்பது உங்களது அறிக்கையில் இருந்த உங்கள் வாய்வார்த்தைகள் மூலம் தெரிந்து கொண்டோம். மேலும் அதுவே உண்மை என ஆராய்ந்த பின் உணர்ந்து கொண்டோம். தனியார் கல்வி நிறுவனமென்பது இலாப நோக்கமுடையது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. 

உங்களுக்கு தேவைப்படின் வணிக துறை சார்ந்த ஆசிரியரின் உதவியினை நாடித் தெரிந்துகொள்ளுங்கள். இது தொடர்பில் கல்வி மற்றும் நிந்தவூர் சார்ந்த சமூகம் அறியப்படாத உண்மையினை (ஆதாரங்கள் துணை கொண்டு) வெளிப்படுத்த விளைகின்றோம். திரு. சலாம் ஆசிரியரால் ஒவ்வொரு வருடத்திற்கும் 60-70 வரையான மட்டு அம்பாறை சார்ந்த மாணவர்;கள் 03 பாடங்களுக்கும் இலவசமாக கற்பிக்கப்பட்டு இச்சமூகத்தில் உயர்நிலையயை அடையும் வகையில் அவர்கள் வழிநடாத்தப்படுகின்றார்கள். 

மேலும் மாவட்ட ரீதியில் 1ம், 2ம், 3ம் நிலையினை அடையும் மாணவர்களை பாராட்டும் வகையில், அவர்களது வெற்றிக்கு பரிசளிக்கும் வகையில், அவர்களின் எதிர்காலத்தை செப்பனிடும் வகையில் அவர்களுக்கு தொழில்சார் கற்கை நெறிகள் (CIMA, ACCA) இலசவமாக தொடர்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுள்ளது திரு. சலாம் ஆசிரியரால் மட்டுமே என்பதை நீங்கள் அறிவீர்களா? அல்லது சேவை மனப்பாங்குடைய மதிப்பிற்கு உயரிய ஆசிரியரே இவ்வாறான நடவடிக்கை ஒன்றினையேனும் உங்கள் வாழ்க்கை வரலாற்றில் முன்னெடுக்கப்பட்டதா? அல்லது எதிர்காலத்தில் முன்னெடுக்க முடியுமா?

சமூகமே! எமது அல்-அஷ்றக் தேசிய பாடசாலையின் 1993ம் ஆண்டுக்கு முன் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானோர் புள்ளி விபரங்களையும் அதற்கு பின் தெரிவானோர் விபரங்களையும் திரட்டிப்பாருங்கள். உங்களுக்கு தெரியுமா? 1991/1992 காலப்பகுதியில் மதிப்பிற்குரிய திரு அல்ஹாஜ் MT. நிஸாம் (தற்போதைய மாகாணக்கல்வி பணிப்பாளர்) அவர்கள் நமது தேசிய பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய போது அவர் அந்த பதவியில் இருக்க கூடாது என்ற ஒரே காரணத்திற்காக நமது இலாப நேக்கமற்ற நீதிக்கு புகழ்பெற்ற திரு. றசாக் ஆசரியர் அவர்கள் சுமார் 08 மாத காலப்பகுதியில் எந்த விதமான கற்பித்தல் நடவடிக்கைகளும் உயர்தர மாணவர்களுக்கு முன்னெடுக்காமல் அவர்கள் வாழ்க்கையில் விளையாடியனார். இதனை திரு. றசாக் ஆசிரியர் அவர்களே மறந்து விட்டார். 

இதற்கு ஆதாரமாக அக்கால மாணவர்களே உள்ளனர். மேலும் அம்மாணவர்கள் இது தொடர்பில் பிற சிக்கல்கள் எத்தனையோ முகம் கொண்டு அவர்கள் வாழ்க்கையில் முன்னேறியிருக்கிறார்கள் என்பது வரலாறு அறிந்த உண்மை. மேலும் 2017ல் பொதுப்பரீட்சை எழுதவிருக்கும் உயர்தர மாணவர்களுக்கு கடந்த 04 மாத காலமாக எந்தவித கணக்கீட்டு தொடர்பான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் கசப்பான உண்மையாகும்.

புதிய பாடத்திட்டமானது 2011ம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாண்டில் திரு. சலாம் ஆசிரியர் அவர்களிடம் கல்வி கற்ற மாணவர்கள் மாவட்ட ரீதியில் வரிசையாக முதல் 03 இடங்களையும் பிடித்தனர். 

மேலும் அவர்கள் தேசிய ரீதில் முதல் தர 50 மாணவர்களுக்குள் உள்வாங்கப்பட்டனர். அவர்கள் சஞ்சிகைகளிலும் பத்திரிக்கைகளிலும் கௌரவிக்கப்பட்டனர் என்பது திரு. றசாக் ஆசிரியர் அறிந்திருந்தும் 2000ஆம் ஆண்டில் பாடத்திட்டம் மாற்றப்பட்டதாக சமூகத்திற்கு கூற நினைக்கும் கதையின் காரணம் என்ன? என்பது தொடர்பில் சற்றும் தெளிவில்லாமல் தள்ளாடுகின்றோம்.

உயர்தர பரீட்சைக்கு திரு. சலாம் ஆசிரியர் அவர்களின் வினாக்கள் சார்ந்ததாக எந்தவொரு வினாக்களும் வருவதில்லை எனவும் அவருடைய கணக்குகள் அதாவது செம்மையாக்களில் தவறுகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த சில்லறை தனமான கேள்விக்கு திரு. சலாம் ஆசிரியர் அவர்கள் மாணவர் சமூகம் முன்னிலையில் பதிலளிக்க விரும்புகிறார். மாணவர்களான எங்களால் இதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தி தருகிறோம். 

இதற்கு நீங்கள் தயாராக உள்ளீர்களா? மேலும் ஒரு ஆசிரியர் கற்பித்தால் அனைவரும் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்று அனைத்தும் அறிந்த திரு றசாக் ஆசிரியர் கூறிய கருத்தும் அதற்கு விடையளிக்க நினைப்பதும் நகைப்பிற்குரியது என்பதை அறிவுடைய அனைவரும் ஏற்றுக்கொள்வர்.

நீங்கள் குறிப்பிட்டிருந்த சமூகத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்திய காதல் விவகாரங்களை தெளிவு படுத்துவதில் எமது பார்வை. 

திரு. றசாக் ஆசிரியர் அவர்கள் கூறியது படியல்ல அதற்கு வேர் ஆனது அல்- அஷ்றக் தேசிய பாடசாலையாகிய நமது பாடசலையில் இருந்து வழங்கப்பட்டது. அது தொடர்பில் விசாரணை செய்ததை திரு. றசாக் ஆசிரியர் அவர்கள் மறந்துவிட்டார். இதனை அவ்வாண்டு மாணவர்கள் அறிவர், அக்கால பெற்றோர்களும் சமூகமும் அறிவர். மேலும் இதனை திரு. றசாக் ஆசிரியர் மறுபடியும் சமூகத்தின் ஞாபகத்திற்கு கொண்டு வந்து மேலும் மேலும் கசப்பூட்ட நினைப்பதற்கு காரணம் என்னவாக இருக்கின்றது. பாடசலையில் இது மட்டுமல்ல காதல் மாயைகள்.

இது போன்ற இன்னும் எத்தனை எத்தனையே விவகாரங்கள் உள்ளன என்பதை பாடசாலை ஆசிரியர்களும் மாணவர் சமூகமாகிய நாங்களும் அறிவோம். மேலும் எத்தனை காதல் விவகாரங்கள் நியாய நீதிபதியான திரு. றசாக் ஆசிரியர்களின் செல்வாக்கினால் மறைக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. 

திரு. றசாக் ஆசிரியர் அவர்களின் உறவினர் அல்லது ஊரின் சில பிரபல்யங்களிடம் தான் நல்ல பெயர் கொள்ள வேண்டும் என்பதற்காக எத்தனையோ காதல் விவகாரங்களை திரு. றசாக் ஆசிரியர் மூடி மறைத்து மாணவர்களை காதலிக்க மேலும் ஊக்குவித்த உண்மை சம்பவங்கள் ஆதாரத்துடன் உள்ளன.

நீங்கள் வெளியானதாக கூறுகின்ற 'GUIDELINE' கணக்கீட்டு வினாத்தாளினை பரீட்சை நடாத்துவதற்கு முன்னர் திரு. MCM. சர்ஜுன் ஆசிரியர் (இலாப நோக்குடைய நிறுவன ஆசிரியர்) வினயமாக கேட்டுள்ளார். இதற்கான ஆதாரங்களும் எங்களின் கைகளில் உள்ளது. 

இவரின் ஆதிக்கத்தை மாணவர்களிடையே மேம்படுத்துவதற்கு அவ்வாசிரியருடன் நீங்கள் கை கோர்த்துக் கொண்டு அந்த விடயத்தை முழுபூசணியை சோற்றிலே மறைக்கு முனையும் நாடகமெனவும் நாங்கள் அறிவோம். இதனை இச்சமூகத்திற்கும் வெளிப்படுத்த முனைகின்றோம்.

மாணவர் சமூகம், 
நன்றி

04.04.2016 ஆம் திகதி எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்ட நிந்தவூர் அல்-அஷ்ரக் பாடசாலையின் பொருப்பான ஆசிரியர் அல்ஹாஜ் றசாக்  அவர்களினால் வழங்கப்பட்ட மறுப்புக்கு தொடர்ந்தும் ILA. சலாம் ஆசிரியரின் மாணவர் சமூகம் எமது இம்போட் மிரர் இணையத்தளத்திற்கு அனுப்பிய செய்தி..! 

தொடர்புடைய செய்திகள் : 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -